திருப்புகழ் 860 படியை அளவிடு (திருவிடைமருதூர்)

Thiruppugal 860 Padiyaialavidu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் – தந்ததான

படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் – செம்பொன்மேனிப்

பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் – துன்றுமூலச்


சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் – றுய்ந்துபாடித்

தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் – சிந்தியாதோ

கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் – கண்டுசேரக்

கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் – துங்கவேலா


அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் – தங்குமார்பா


அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்
றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் – தந்ததான

படியை அளவு இடு நெடிய கொண்டலும் சண்டனும்
தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும்
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் – செம் பொன் மேனிப்

பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும்
திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும்
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் – துன்று மூலச்

சடை முடியில் அணியும் ந(ல்)ல சங்கரன் கும்பிடும்
குமரன் அறுமுகவன் மதுரம் தரும் செம் சொ(ல்)லன்
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று – உய்ந்து பாடித்

தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன்
பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன்
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் – சிந்தியாதோ

கடுகு பொடி தவிடு பட மந்திரம் தந்திரம்
பயில வரு(ம்) நிருதர் உடலம் பிளந்து அம்பரம்
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் – கண்டு சேர


கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு(ம்) நின்று
அலகை பல திமிலை கொடு தந்தனம் தந்தனம்
கருதி இசை பொசியும் நசை கண்டு கண்டு இன்புறும் – துங்க வேலா

அடல் புனையும் இடை மருதில் வந்து இணங்கும் குணம்
பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கு(ம்)
அடவி தனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் – தங்கு(ம்) மார்பா

அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம்
கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று
அழகு பெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் – தம்பிரானே

English

padiyaiyaLa vidunediya koNdalum saNdanum
thamarasathu maRaiyamarar sangamum sampuvum
paravariya nirupanvira kansudum sampanan – semponmEnip


paramanezhil punaiyumara vangaLung kangaiyun
thiruvaLaru muLariyodu thingaLung konRaiyum
pariyakumi zhaRukukana thumpaiyunj sempaiyun – thunRumUlac

cadaimudiyi laNiyunala sangaran kumpidung
kumaranaRu mukavanmathu rantharunj cencholan
saravaNaiyil varumuthali konthakan kanthanen – RuynthupAdith

thaNiyavoli pukalumvitha monRilum senRilan
pakiravoru thinaiyaLavu paNpukoN daNdilan
thavaneRiyi lozhukivazhi paNpadung kangaNam – sinthiyAthO

kadukupodi thavidupada manthiran thanthiram
payilavaru nirutharuda lampiLan thamparang
kathaRiveku kuruthinathi pongidum sampramang – kaNdusErak

kazhukunari kodikaruda nangezhun thengunin
Ralakaipala thimilaikodu thanthanan thanthanang
karuthiyisai posiyunasai kaNdukaN dinpuRum – thungavElA

adalpunaiyu midaimaruthil vanthiNang kunguNam
periyaguru parakumara sinthuranj senRadang
kadavithani luRaikumari santhilang kunthanan – thangumArpA

aruNamaNi veyililaku thaNdaiyam pangayang
karuNaipozhi vanakazhali lanthamun thampamen
RazhakupeRa neRivarudi yaNdarun thoNduRun – thambirAnE.

English Easy Version

padiyai aLavu idu nediya koNdalum saNdanum
thamara sathumaRai amarar sangamum sampuvum
parava ariya nirupan virakan sudum sampanan sem – pon mEnip

paraman ezhil punaiyum aravangaLum kangaiyum
thiru vaLarum muLariyodu thingaLum konRaiyum
pariya kumizh aRuku kana thumpaiyum sempaiyum – thunRu mUlac

cadai mudiyil aNiyum na(l)la sangaran kumpidum
kumaran aRumukavan mathuram tharum sem so(l)lan
saravaNaiyil varu muthali konthakan kanthan enRu – uynthu pAdith

thaNiya oli pukalum vitham onRilum senRilan
pakira oru thinai aLavu paNpu koNdu aNdilan
thava neRiyil ozhuki vazhi paNpadum kangaNam – sinthiyAthO

kaduku podi thavidu pada manthiram thanthiram
payila varu(m) niruthar udalam piLanthu amparam
kathaRi veku kuruthi nathi pongidum sampramam – kaNdu sEra

kazhuku nari kodi karudan angu ezhunthu engu(m) ninRu
alakai pala thimilai kodu thanthanam thanthanam
karuthi isai posiyum nasai kaNdu kaNdu inpuRum – thunga vElA

adal punaiyum idai maruthil vanthu iNangum kuNam
periya gurupara kumara sinthuram senRu adangu(m)
adavi thanil uRai kumari santhu ilangum thanam – thangu(m) mArpA

aruNa maNi veyil ilaku thaNdai am pangayam
karuNai pozhivana kazhalil anthamum thampam enRu
azhaku peRa neRi varudi aNdarum thoNdu uRum – thambirAnE