திருப்புகழ் 861 புழுகொடுபனி (திருவிடைமருதூர்)

Thiruppugal 861 Puzhugodupani

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனதன தான தானன தனதனதன தான தானன
தனதனதன தான தானன – தந்ததான

புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
புளகிதஅபி ராம பூஷித – கொங்கையானை


பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி
பொருவனகணை போல்வி லோசன – வந்தியாலே

மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன
வெகுவிதபரி தாப வாதனை – கொண்டுநாயேன்


மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின்
விதரணசிவ ஞான போதகம் – வந்துதாராய்


எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி
யிடர்கெடஅசு ரேசர் சேனைமு – றிந்துபோக

இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட
ரணமுககண பூத சேனைகள் – நின்றுலாவச்

செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
செயசெயமுரு காகு காவளர் – கந்தவேளே

திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
திருவிடைமரு தூரில் மேவிய – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதனதன தான தானன தனதனதன தான தானன
தனதனதன தான தானன – தந்ததான

புழுகு ஒடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பி(ல்) லேபனம்
புளகித அபிராம பூஷித – கொங்கை யானை

பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணிஅணி குழை மீது தாவடி
பொருவன கணை போல் விலோசன – வந்தியாலே

மெழுகு என உருகா அ(ன்)னார் தமது இதய கலகமோடு மோகன
வெகு வித பரிதாப வாதனை – கொண்டு நாயேன்

மிடை படும் மலம் மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின்
விதரண சிவ ஞான போதகம் – வந்து தாராய்

எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி
இடர் கெட அசுரேசர் சேனை – முறிந்து போக


இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் கக ராசன் மேலிட
ரண முக கண பூத சேனைகள் – நின்று உலாவ

செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக
செய செய முருகா குகா வளர் – கந்த வேளே

திரைபொரு கரை மோது(ம்) காவிரி வருபுனல் வயல் வாவி சூழ்தரு
திருவிடை மருதூரில் மேவிய – தம்பிரானே.

English

puzhukodupani neersa vAthuda nirukaramiku mArpi lEpana
puLakithApi rAma pUshitha – kongaiyAnai


pothuvinilvilai kURu mAtharkaL maNiyaNikuzhai meethu thAvadi
poruvanakaNai pOlvi lOchana – vanthiyAlE

mezhukenavuru kAva nArthama thithayakalaka mOdu mOkana
vekuvithapari thApa vAthanai – koNdunAyEn

midaipadumala mAyai yAlmika kalaviya aRi vEka sAminin
vitharaNasiva njAna pOthakam – vanthuthArAy

ezhukirinilai yOda vArithi mokumokuvena veesa mEthini
yidarkedAsu rEsar sEnaimu – RinthupOka


imaiyavarsiRai meeLa nAynari kazhukukaLkaka rAsan mElida
raNamukakaNa pUtha sEnaikaL – ninRulAvac

chezhumathakari neela kOmaLa apinavamayi lERu sEvaka
seyaseyamuru kAku kAvaLar – kanthavELE

thiraiporukarai mOthu kAviri varupunalvayal vAvi cUzhtharu
thiruvidaimaru thUril mEviya – thambirAnE.

English Easy Version

puzhuku odu panineer savAthu udan iru karam miku mArpi(l) lEpanam
puLakitha apirAma pUshitha – kongai yAnai

pothuvinil vilaikURum mAtharkaL maNiaNi kuzhai meethu thAvadi
poruvana kaNai pOl vilOsana – vanthiyAlE

mezhuku ena urukA a(n)nAr thamathu ithaya kalakamOdu mOkana
veku vitha parithApa vAthanai – koNdu nAyEn

midai padum malam mAyaiyAl mika kalaviya aRivu Eka sAmi nin
vitharaNa siva njAna pOthakam – vanthu thArAy

ezhu kiri nilai Oda vArithi mokumoku ena veesa mEthini
idar keda asurEsar sEnai – muRinthu pOka

imaiyavar siRai meeLa nAy nari kazhukukaL kaka rAsan mElida
raNa muka kaNa pUtha sEnaikaL – ninRu ulAva

sezhu matha kari neela kOmaLa api nava mayil ERu sEvaka
seya seya murukA kukA vaLar – kantha vELE

thiraiporu karai mOthu(m) kAviri varupunal vayal vAvi cUzhtharu
thiruvidai maruthUril mEviya – thambirAnE