திருப்புகழ் 862 தனுநுதல் வெயர் (திரிபுவனம்)

Thiruppugal 862 Thanunudhalveyar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன – தந்ததான

தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
சத்திக் கச்சில தித்திக் கப்படும் – அன்புபேசித்

தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன – தொண்டையூறல்

கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி – கின்றதோதான்

கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப – தம்பெறேனோ

முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித – அம்புராசி

முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும – டங்கல்வீரா

அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை – கொண்டநாதா

அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன – தந்ததான

தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை
சத்திக்கச் சில தித்திக்கப்படும் – அன்பு பேசி

தழுவிய மகளிர் தம் முகிழ் முலை உரம் மிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப்பட்டன – தொண்டை ஊறல்

கனவிலு(ம்) நுகர் தரு கலவியின் வலை இடை
கட்டுப்பட்டு உயிர் தட்டுப் பட்டு – அழிகின்றதோ தான்

கதி பெற விதி இலி மதி இலி உனது இரு
கச்சு உற்றச் சிறு செச்சைப் பத்ம – பதம் பெறேனோ

முனை மலி குலிசை தன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ர தனத்துக்கு இச்சித – அம்புராசி

முறை இட முது நிசிசரர் திரள் முதுகு இட
முட்டப் பொட்டு எழ வெட்டிக் குத்தும் – அடங்கல் வீரா

அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள்
அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை – கொண்ட நாதா

அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்துப்
பொற்பு உறு சித்திச் சித்தர்கள் – தம்பிரானே

English

thanunuthal veyarvezha vizhikuzhi tharavaLai
saththik kacchila thiththik kappadum – anpupEsith

thazhuviya makaLirtha mukizhmulai yuramisai
thaikkac charkkarai kaikkap pattana – thoNdaiyURal

kanavilu nukartharu kalaviyin valaiyidai
kattup pattuyir thattup pattazhi – kinRathOthAn

kathipeRa vithiyili mathiyili yunathiru
kacchut RacchiRu secchaip pathmapa – thampeREnO

munaimali kulisaithan mrukamatha puLakitha
muththac chithratha naththuk kicchitha – ampurAsi

muRaiyida muthunisi sararthiraL muthukida
muttap pottezha vettik kuththuma – dangalveerA

anupava maLitharu nikazhtharu moruporuL
appark kappadi yoppith tharcchanai – koNdanAthA

akilamu mazhiyinu nilaipeRu thiripuva
naththup poRpuRu siththic chiththarkaL – thambirAnE.

English Easy Version

thanu nuthal veyarvu ezha vizhi kuzhi thara vaLai
saththikkac chila thiththikkappadum – anpu pEsi

thazhuviya makaLir tham mukizh mulai uram misai
thaikkac charkkarai kaikkappattana – thoNdai Ural

kanavilu(m) nukar tharu kalaviyin valai idai
kattuppattu uyir thattup pattu – azhikinRathO thAn

kathi peRa vithi ili mathi ili unathu iru
kacchu utRac chiRu secchaip pathma – patham peREnO

munai mali kulisai than mrukamatha puLakitha
muththac chithra thanaththukku icchitha – ampurAsi

muRai ida muthu nisisarar thiraL muthuku ida
muttap pottu ezha vettik kuththum – adangal veerA

anupavam aLi tharu nikazh tharum oru poruL
apparkku appadi oppiththu arcchanai – koNda nAthA

akilamum azhiyinum nilaipeRu thiripuvanaththup
poRpu uRu siththic chiththarkaL – thambirAnE