திருப்புகழ் 864 தும்பி முகத்தானை (கும்பகோணம்)

Thiruppugal 864 Thumbimugaththanai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் – தனதான

தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
றொந்தமெனப் பாயுமுலைக் – கனமாதர்


தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
தொங்கல்மயிற் சாயலெனக் – குழல்மேவிச்

செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
செங்கயலைப் போலும்விழிக் – கணையாலே


சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்
திந்திமெனுற் றாடுமவர்க் – குழல்வேனோ

தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
சந்தமயிற் சாய்விலகிச் – சிறைபோகச்

சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்
தங்கநிறத் தாள்சிறையைத் – தவிர்மாயோன்

கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
கொண்டுவளைத் தேமகிழச் – சுதனீண

கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்
கும்பகொணத் தாறுமுகப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் – தனதான

தும்பி முகத்து ஆனை பணைக் கொம்பு அது எனத் தாவி மயல்
தொந்தம் எனப் பாயு(ம்) முலை – கன மாதர்

தும்பி மலர்ச் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிறத்
தொங்கல் மயில் சாயல் எனக் – குழல் மேவி

செம் பொன் உருக்கான மொழிச் சங்கின் ஒளிக் காம நகைச்
செம் கயலைப் போலும் விழிக் – கணையாலே

சிந்தை தகர்த்து ஆளும் இதச் சந்த்ர முகப் பாவையர் தித்
திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு – உழல்வேனோ

தம்பி வரச் சாதி திருக் கொம்பு வரக் கூட வனச்
சந்த மயில் சாய் விலகிச் – சிறை போக

சண்டர் முடித் தூள்கள் படச் சிந்தி அரக்கோர்கள் விழத்
தங்க நிறத்தாள் சிறையைத் – தவிர் மாயோன்

கொம்பு குறிக் காளம் மடுத் திந்தம் என உற்று ஆடி நிரைக்
கொண்டு வளைத்தே மகிழ் – அச்சுதன் ஈண

கொஞ்சு சுகப் பாவை இணைக் கொங்கை தனில் தாவி
மகிழ் கும்பகொணத்து ஆறுமுகப் – பெருமாளே.

English

thumpimukath thAnaipaNaik kompathenath thAvimayat
Ronthamenap pAyumulaik – kanamAthar


thumpimalarc chOlaimukiR kangulirut kariniRath
thongalmayiR chAyalenak – kuzhalmEvi

semponuruk kAnamozhic changinoLik kAmanakai
sengayalaip pOlumvizhik – kaNaiyAlE

sinthaithakarth thALumithac chanthramukap pAvaiyarthith
thinthimenut RAdumavark – kuzhalvEnO

thampivarac chAthithiruk kompuvarak kUdavanac
chanthamayiR chAyvilakic – chiRaipOkac

chaNdarmudith thULkaLpadac chinthiyarak kOrkaLvizhath
thanganiRath thALchiRaiyaith – thavirmAyOn

kompukuRik kALamaduth thinthamenut RAdiniraik
koNduvaLaith thEmakizhac – chuthaneeNa

konjusukap pAvaiyiNaik kongaithanit RAvimakizhk
kumpakoNath thARumukap – perumALE.

English Easy Version

thumpi mukaththu Anai paNaik kompu athu enath thAvi mayal
thontham enap pAyu(m) mulai – kana mAthar

thumpi malarc chOlai mukil kangul iruL kArin niRath
thongal mayil sAyal enak – kuzhal mEvi

sem pon urukkAna mozhic changin oLik kAma nakaic
chem kayalaip pOlum vizhik – kaNaiyAlE

sinthai thakarththu ALum ithac chanthra mukap pAvaiyar
thiththinthim ena utRu Adum avarkku – uzhalvEnO

thampi varac chAthi thiruk kompu varak kUda vanac
chantha mayil sAy vilakic – chiRai pOka

saNdar mudith thULkaL padac chinthi arakkOrkaL vizhath
thanga niRaththAL siRaiyaith – thavir mAyOn

kompu kuRik kALam maduth thintham ena utRu Adi niraik
koNdu vaLaiththE makizh – acchuthan eeNa

konju sukap pAvai iNaik kongai thanil thAvi makizh
kumpakoNaththu ARumukap – perumALE.,