திருப்புகழ் 865 கெண்டை நேரொத்தவிழி (கும்பகோணம்)

Thiruppugal 865 Kendaineroththavizhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன – தனதான

கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
கெந்தவா சப்புழுகு – மணநாறுங்

கிம்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது
கிஞ்சுகா ணப்பெருகி – யடியேனும்

மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
வண்டனா கப்புவியி – லுழலாமல்

வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா ளைத்தினமு – மருள்வாயே

அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி
ளைந்துவீ ழப்பொருத – கதிர்வேலா

அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
னன்புளா ரைச்சிறையி – டசுரோரைக்

கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை – யரிவோனே

கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
கும்பகோ ணத்திலுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன – தனதான

கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோகக் கலவை
கெந்த வாசப் புழுகு – மண(ம்) நாறும்

கிம்புரி ஈசக் களப(ம்) கொங்கை யானைச் சிறிது
கிஞ்சு காணப் பெருகி – அடியேனும்

மண்டி மோசக் கலவி கொண்டு காமித்து உருகி
வண்டன் ஆகப் புவியில் – உழலாமல்

வந்து ஞானப் பொருளில் ஒன்று போதித்து உனது
மஞ்சு தாளைத் தினமும் – அருள்வாயே

அண்டர் வாழப் பிரபை சண்ட மேருக் கிரி
இளைந்து வீழப் பொருத – கதிர்வேலா

அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறித் தவசில் அன்பு
உளாரைச் சிறையி(ட்)ட – அசுரோரைக்

கொண்டு போய் வைத்த கழு நெஞ்சில் ஏறக் கழுகு
கொந்தி ஆடத் தலையை – அரிவோனே

கொண்டல் சூழ் அக்கழனி சங்கு உலாவிப் பரவு
கும்பகோணத்தில் உறை – பெருமாளே.

English

keNdainE roththavizhi mangaimO kakkalavai
kenthavA sappuzhuku – maNanARum

kimpuree sakkaLapa kongaiyA naicchiRithu
kinjukA Napperuki – yadiyEnum

maNdimO sakkalavi koNdukA miththuruki
vaNdanA kappuviyi – luzhalAmal

vanthunjA napporuLi lonRupO thiththunathu
manjuthA Laiththinamu – maruLvAyE

aNdarvA zhappirapai saNdamE rukkiriyi
Lainthuvee zhapporutha – kathirvElA

anjuvA yiRparanai nenjilU Riththavasi
nanpuLA raicchiRaiyi – dasurOraik

koNdupOy vaiththakazhu nenjilE Rakkazhuku
konthiyA daththalaiyai – yarivOnE

koNdalcU zhakkazhani sangulA vipparavu
kumpakO NaththiluRai – perumALE.

English Easy Version

keNdai nEr oththa vizhi mangai mOkak kalavai
kentha vAsap puzhuku – maNa(m) nARum

kimpuri eesak kaLapa(m) kongai yAnaic chiRithu
kinju kANap peruki – adiyEnum

maNdi mOsak kalavi koNdu kAmiththu uruki
vaNdan Akap puviyil – uzhalAmal

vanthu njAnap poruLil onRu pOthiththu unathu
manju thALaith thinamum – aruLvAyE

aNdar vAzhap pirapai saNda mEruk kiri
iLainthu veezhap porutha – kathirvElA

anju vAyil paranai nenjil URith thavasil
anpu uLArais siRaiyi(d)da – asurOraik

koNdu pOy vaiththa kazhu nenjil ERak kazhuku
konthi Adath thalaiyai – arivOnE

koNdal cUzh akkazhani sangu ulAvip paravu
kumpakONaththil uRai – perumALE.,