திருப்புகழ் 868 கறுத்த குஞ்சியும் (கும்பகோணம்)

Thiruppugal 868 Karuththakunjiyum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் – தனதான

கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் – சுருள்நோயாற்

கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் – கொழுமேனி

அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் – சடமாகி

அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் – றிடுவேனோ


புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
புகட்ட ரங்கிய விரக துரங்கத் – திறல்வீரா

பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் – பொரும்வேலா

சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் – கிரிமேவிச்

செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
பரிச்சு மந்திடு குமர கடம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் – தனதான

கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து
உருத்த வெண் ப(ல்)லும் அடைய விழுந்து உள்
கருத்துடன் திகழ்மதியும் மருண்டு – சுருள் நோயால்

கலக்கமுண்டு அலம் அலம் உற வெண்டி
பழுத்து எழும்பிய முதுகு முடங்க
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க – கொழு மேனி

அறத் திரங்கி ஒர் தடி கை நடுங்கப்
பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப – சடமாகி

அழுக்கு அடைந்து இடர்ப் படும் உடல்
பங்கப் பிறப்பு எனும் கடல் அழியல்
ஒழிந்திட்டு அடுத்திரும் திருவடி தனை என்று – உற்றிடுவேனோ

புறத் தலம் பொடி பட மிகவும் கட்டு
அற பெரும் கடல் வயிறுகுழம்ப
புகட்டு அரங்கிய விரக துரங்கத் – திறல் வீரா

பொருப்பு உரம் படர் கிழி பட வென்று
அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி
புதைக் குறும் தசை குருதிகள் பொங்கப் – பொரும் வேலா

சிறுத்த தண்டைய மதலையொர் அஞ்ச
சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற
தினைப்புனம் திகழ் குறமகள் கொங்கை – கிரி மேவி

செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி
பரி சுமந்திடு குமர கடம்ப
திருக்குடந்தையில் உறைதரு கந்தப் – பெருமாளே.

English

kaRuththa kunjiyum veLiRi ezhungkoth
thuruththa veNpalum adaiya vizhundhut
karuththudan thigazh madhiyu maruNdu – suruLnOyAR

kalakka muNdala malamuRa veNdip
pazhuth thezhumbiya mudhugu mudangak
kazhuththil vandhiLai irumal odhungak – kozhumEni

aRath thirangiyor thadikai nadungap
pidiththidum puRu manaiviyu nindhith
thaduththa maindharum vasaigaL viLamba – jadamAgi

azhukka daindhidar padumudal pangap
piRappenung kadal azhiyal ozhindhit
taduththirun thiruvadi thanai endru – triduvEnO

puRath thalam podi pada migavung kat
taRa perungkadal vayiRu kuzhambap
pugatta rangiya viraga thurangatha – thiRal veerA

porup puram padar kizhipada vendrat
tarakkar vandralai neriya nerungip
pudhaikkuRun dhasai kurudhigaL ponga – porumvElA

siRuththa thaNdaiya madhalaiyor anja
sinaththu minjari thiritharu kundrath
thinaip punan thigazh kuRamagaL kongai – girimEvi

serukku nenjudai muruga sikaNdip
pari sumandhidu kumara kadambath
thiruk kudandhaiyil uRai tharu kandhap – perumALE.

English Easy Version

kaRuththa kunjiyum veLiRi ezhungkoththuruththa
veNpalum adaiya vizhundhu
utkaruththudan thigazh madhiyu maruNdu – suruLnOyAR

kalakka muNdala malamuRa veNdi
pazhuth thezhumbiya mudhugu mudanga
kazhuththil vandhiLai irumal odhunga – kozhumEni

aRath thirangiyor thadikai nadungap
Pidiththu idum puRu manaiviyu nindhithu
aduththa maindharum vasaigaL viLamba – jadamAgi

azhukka daindhu idar padumudal pangap
piRappenung kadal azhiyal ozhindhittu
aduththirun thiruvadi thanai endru – triduvEnO

puRath thalam podi pada migavung kattaRa
perungkadal vayiRu kuzhamba
pugatta rangiya viraga thurangath – thiRal veerA

porup puram padar kizhipada vendru
attarakkar vandralai neriya nerungi
pudhaikkuRun dhasai kurudhigaL pongap – porumvElA

siRuththa thaNdaiya madhalaiyor anja
sinaththu minjari thiritharu kundra
thinaip punan thigazh kuRamagaL kongai – girimEvi

serukku nenjudai muruga sikaNdip
pari sumandhidu kumara kadamba
thiruk kudandhaiyil uRai tharu kandhap – perumALE