திருப்புகழ் 870 கரியகுழல் சரிய (சோமீச்சுரம்)

Thiruppugal 870 Kariyakuzhalsariya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன – தனதான

கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்
கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல – கனிவாயின்

கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு
கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை
கலகலென மொழிபதற மாமோக காதலது – கரைகாணா

தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை
யிருவருட லொருவரென நாணாது பாயல்மிசை
யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு – மிமையாதே

இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை – யருள்வாயே

உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு – னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு – முயர்வாக

வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட – மதில்சூழும்

மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன – தனதான

கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசம் உறு
களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள்
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல – கனி வாயின்

கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு
கடல் அமுதம் உதவி இரு தோள் மாலை தாழ வளை
கல கல என மொழி பதற மா மோக காதல் அது – கரை காணாது

எரி அணுகு மெழுகு பதமாய் மேவி மேவி இணை
இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை
இளமகளிர் கலவிதனிலே மூழ்கி ஆழுகினும் – இமையாதே

இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும்
இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை – அருள்வாயே

உரிய தவ நெறியில் நம நாராயணாய என
ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன்
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் – உறு தூணில்

உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல்
உகிர் புதைய இரணியனை மார்பீறி வாகை புனை
உவண பதி நெடியவனும் வேதாவும் நான் மறையும் – உயர்வாக

வரி அளிகள் இசை முரல வாகு ஆன தோகை இள
மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகியிட மதில் சூழும்

மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக
மழம் விடையின் மிசையி(ல்) வரு(ம்) சோமீசர் கோயில் தனில்
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் – பெருமாளே

English

kariya kuzhal sariya mukam vErvAda vAsam uRu
kaLaba mulai puLagamezha nErAna vElvizhigaL
kayal porudhu seyaladhena neeL pUsalAda nala – kani vAyin

kamazh kumudha adhara idhazh thEnURal pAya migu
kadal amudha mudhavi iru thOL mAlai thAzha vaLai
kalakalena mozhi padhara mAmOha kAdhaladhu – karai kANA

dheriyaNugu mezhugupadha mAy mEvi mEviyiNai
iruvarudal oruvarena nANAdhu pAyal misai
iLamagaLir kalavi thanilE mUzhgi yAzhuginum – imaiyAdhE

iravin idai thuyiluginum yArOdu pEsuginum
iLamaiyumun azhagu punai eerARu thOL niraiyum
irupadhamum aRumugamum yAn Odha nyAna madhai – aruLvAyE

uriya thava neRiyil nama nArAyaNAya ena
oru madhalai mozhi aLavil OrAdha kObamudan
unadhiRaivan edhanil uLan OdhAyadA enu munu – Ru thUNil

uram udaiya ari vadivadhAy mOdhi veezha viral
ugir pudhaiya iraNiyanai mAr peeRi vAgai punai
uvaNapathi nediyavanum vEdhAvum nAn maRaiyum – uyarvAga

variyaLigaL isai murala vAgAna thOgai iLa
mayil idaiyil natanamida AkAsam Uduruva
vaLar kamugin virikulaigaL pUNAra mAgi ida – madhil sUzhum

marudharasar padaividudhi veedAga nAdimiga
mazhavidaiyin misaiyivaru sOmeesar kOyil thanil
magizhvu peRa uRai muruganE pENu vAnavargaL – perumALE.

English Easy Version

kariya kuzhal sariya mukam vErvAda vAsam uRu
kaLaba mulai puLagamezha nErAna vElvizhigaL
kayal porudhu seyaladhena neeL pUsalAda nala – kani vAyin

kamazh kumudha adhara idhazh thEnURal pAya migu
kadal amudha mudhavi iru thOL mAlai thAzha vaLai
kalakalena mozhi padhara mAmOha kAdhaladhu – karai kANAdh(u)

eriyaNugu mezhugupadha mAy mEvi mEviyiNai
iruvarudal oruvarena nANAdhu pAyal misai
iLamagaLir kalavi thanilE mUzhgi yAzhuginum – imaiyAdhE

iravin idai thuyiluginum yArOdu pEsuginum
iLamaiyumun azhagu punai eerARu thOL niraiyum
irupadhamum aRumugamum yAn Odha nyAna madhai – aruLvAyE

uriya thava neRiyil nama nArAyaNAya ena
oru madhalai mozhi aLavil OrAdha kObamudan
unadhiRaivan edhanil uLan OdhAyadA enu mun – uRu thUNil

uram udaiya ari vadivadhAy mOdhi veezha viral
ugir pudhaiya iraNiyanai mAr peeRi vAgai punai
uvaNapathi nediyavanum vEdhAvum nAn maRaiyum – uyarvAga

variyaLigaL isai murala vAgAna thOgai iLa
mayil idaiyil natanamida AkAsam Uduruva
vaLar kamugin virikulaigaL pUNAra mAgi ida – madhil sUzhum

marudharasar padaividudhi veedAga nAdimiga
mazhavidaiyin misaiyivaru sOmeesar kOyil thanil
magizhvu peRa uRai muruganE pENu vAnavargaL – perumALE.,