Thiruppugal 871 Pattumanikkachchi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
தத்ததனத் தத்ததனத் – தனதான
பட்டுமணிக் கச்சிறுகக் கட்டியவிழ்த் துத்தரியப்
பத்தியின்முத் துச்செறிவெற் – பிணையாமென்
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
பட்டுருகிக் கெட்டவினைத் – தொழிலாலே
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத் – திரிவேனைத்
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத் – தருள்வாயே
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
துக்கமுறச் சொர்க்கமுறக் – கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
சுற்றுவனத் திற்சிறைவைத் – திடுதீரன்
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
குற்றமறச் சுற்றமறப் – பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
தத்ததனத் தத்ததனத் – தனதான
பட்டு மணிக் கச்சு இறுகக் கட்டி அவிழ்த்து உத்தரியப்
பத்தியின் முத்துச் செறி வெற்பு – இணையாம் என்
பற்ப(ம்) முகைக் குத்து முலை தத்தையர் கைப் புக்கு வசப்
பட்டு உருகிக் கெட்ட வினைத் – தொழிலாலே
துட்டன் எனக் கட்டன் எனப் பித்தன் எனப் ப்ரட்டன் எனச்
சுற்றும் அறச் சித்தன் எனத் – திரிவேனை
துக்கம் அறுத்துக் கமலப் பொன் பதம் வைத்துப் பதவிச்
சுத்தி அணைப் பத்தரில் வைத்து – அருள்வாயே
சுட்ட பொருள் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொன் கொடியைத்
துக்கம் உற சொர்க்கம் உறக் – கொடி யாழார்
சுத்த ரதத்தில் கொடு புக்குக் கடுகித் தெற்(கு)க் கடைசிச்
சுற்று வனத்தில் சிறைவைத் – திடு தீரன்
கொட்டம் அறப் புற்று அரவச் செற்றம் அறச் சத்தம் அறக்
குற்றம் அறச் சுற்றம் அறப் – பல தோளின்
கொற்றம் அறப் பத்து முடிக் கொத்தும் அறுத்திட்ட திறல்
கொற்றர் பணிக் கொட்டை நகர்ப் – பெருமாளே
English
pattumaNik kacchiRukak kattiyavizhth thuththariyap
paththiyinmuth thuccheRiveR – piNaiyAmen
paRpamukaik kuththumulaith thaththaiyarkaip pukkuvasap
patturukik kettavinaith – thozhilAlE
thuttanenak kattanenap piththanenap prattanenac
chutRumaRac chiththanenath – thirivEnaith
thukkamaRuth thukkamalap poRpathamvaith thuppathavic
chuththiyaNaip paththarilvaith – tharuLvAyE
suttaporut kattiyinmeyc chekkamalap poRkodiyaith
thukkamuRac chorkkamuRak – kodiyAzhAr
suththarathath thiRkodupuk kukkadukith theRkadaisic
chutRuvanath thiRchiRaivaith – thidutheeran
kottamaRap putRaravac chetRamaRac chaththamaRak
kutRamaRac chutRamaRap – palathOLin
kotRamaRap paththumudik koththumaRuth thittathiRaR
kotRarpaNik kottainakarp – perumALE.
English Easy Version
pattu maNik kacchu iRukak katti avizhththu uththariyap
paththiyin muththuc cheRi veRpu – iNaiyAm en
paRpa(m) mukaik kuththu mulai thaththaiyar kaip
pukku vasap pattu urukik ketta vinaith – thozhilAlE
thuttan enak kattan enap piththan enap prattan enac
chutRum aRac chiththan enath – thirivEnai
thukkam aRuththuk kamalap pon patham vaiththup pathavic
chuththi aNaip paththaril vaiththu – aruLvAyE
sutta poruL kattiyin meyc chekkamalap pon kodiyaith
thukkam uRa sorkkam uRak – kodi yAzhAr
suththa rathaththil kodu pukkuk kadukith theR(ku)k
kadaisic chutRu vanaththil siRaivaiththidu – theeran
kottam aRap putRu aravac chetRam aRac chaththam
aRak kutRam aRac chutRam aRap – pala thOLin
kotRam aRap paththu mudik koththum aRuththitta thiRal
kotRar paNik kottai nakarp – perumALE