Thiruppugal 874 Tharaiyinilveguvazhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன – தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை – மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய – தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய – வினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ – அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் – மருகோனே
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி – லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ – முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன – தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டிடா மத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை – மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
அவமதி யதனில் பொலாங்கு தீமைசெய்
சமடனை வலிய அசாங்கமாகிய – தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொடு ஆங்கு கூடிய – வினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலும்
ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாழ் தொழ – அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவணன்
இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும்
ஒருகணை தனில் அற வாங்கு மாயவன் – மருகோனே
உனதடியவர்புகழ் ஆய்ந்த நூலினர்
அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர்
உயர்கதி பெறஅருளோங்கு மாமயில் – உறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பிடார் பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழுது அனைவரு மாய்ந்து தூளெழ – முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கியே திரு
மிடறினில் இருவென ஏந்தும் ஈசுரர்
குருபரன் எனவரு கூந்தலூர் உறை – பெருமாளே
English
tharaiyinil veguvazhi sArndha mUdanai
veRiyanai niRai poRai vEndidA madha
sadalanai magimaigaL thAzhndha veeNanai – migu kELvi
thavaneRi thanaividu thANdu kAliyai
avamadhi adhanil polAngu theemai sey
samadanai valiya asAnga mAgiya – thamiyEnai
viraiseRi kuzhaliyar veembu nAriyar
madhimuka vanithaiyar vAnchai mOgiyar
vizhivalai magaLirod Angu kUdiya – vinaiyEnai
vegumalar adhu kodu vEndi yAgilum
oru malar ilaikodu mOrndhu yAn unai
vidhamuRu parivodu veezhndhu thALthozha – aruLvAyE
orupadhu siramisai pOndha rAvaNan
irupadhu buyamuda nEndhu mEdhiyum
orukaNai thanilaRa vAngu mAyavan – marugOnE
unadhadiyavar pugazh Ayndha nUlilnar
amarargaL munivargaL eendha pAlakar
uyar gathi peRa aruL Ongu mAmayil – uRaivOnE
kurai kazhal paNivodu kUmbidAr poru
kaLamisai aRamadhu theerndha sUrargaL
kulamuzhu dhanaivaru mAyndhu thULezha – munivOnE
koduvidam adhu thanai vAngiyE thiru
midaRinil iruvena Endhum eesurar
guruparan enavaru kUndhalUr uRai – perumALE.
English Easy Version
tharaiyinil veguvazhi sArndha mUdanai
veRiyanai niRai poRai vEndidA madha
Sadalanai magimaigaL thAzhndha veeNanai – migu kELvi
thavaneRi thanaividu thANdu kAliyai
avamadhi adhanil polAngu theemai sey
Samadanai valiya asAnga mAgiya – thamiyEnai
viraiseRi kuzhaliyar veembu nAriyar
madhimuka vanithaiyar vAnchai mOgiyar
vizhivalai magaLirod Angu kUdiya – vinaiyEnai
vegumalar adhu kodu vEndi yAgilum
oru malar ilaikodu mOrndhu yAn unai
vidhamuRu parivodu veezhndhu thALthozha – aruLvAyE
orupadhu siramisai pOndha rAvaNan
irupadhu buyamudan Endhu mEdhiyum
orukaNai thanilaRa vAngu mAyavan – marugOnE
unadhadiyavar pugazh Ayndha nUlilnar
amarargaL munivargaL eendha pAlakar
uyar gathi peRa aruL Ongu mAmayil – uRaivOnE
kurai kazhal paNivodu kUmbidAr
porukaLamisai aRamadhu theerndha sUrargaL
kulamuzhu dhanaivaru mAyndhu thULezha – munivOnE
koduvidam adhu thanai vAngiyE thiru
midaRinil iruvena Endhum eesurar
guruparan enavaru kUndhalUr uRai – perumALE,