Thiruppugal 876 Magarakundalameedhe
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன – தனதான
மகர குண்டல மீதே மோதுவ
வருண பங்கய மோபூ வோடையில்
மருவு செங்கழு நீரோ நீவிடு – வடிவேலோ
மதன்வி டுங்கணை யோவா ளோசில
கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை
மறலி யென்பவ னோமா னோமது – நுகர்கீத
முகர வண்டின மோவான் மேலெழு
நிலவ ருந்துபு ளோமா தேவருண்
முதிய வெங்கடு வோதே மாவடு – வகிரோபார்
முடிவெ னுங்கட லோயா தோவென
வுலவு கண்கொடு நேரே சூறைகொள்
முறைய றிந்தப சாசே போல்பவ – ருறவாமோ
நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
தசமு கன்படை கோடா கோடிய
நிருத ரும்பட வோரே வேவியெ – யடுபோர்செய்
நெடிய னங்கனு மானோ டேயெழு
பதுவெ ளங்கவி சேனா சேவித
நிருப னம்பரர் கோமான் ராகவன் – மருகோனே
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
சிவச டங்கமொ டீசா னாதிகள் – சிவமோனர்
தெளியு மந்த்ரக லாபா யோகிகள்
அயல்வி ளங்குசு வாமீ காமரு
திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன – தனதான
மகர குண்டல(ம்) மீதே மோதுவ
அருண பங்கயமோ பூ ஓடையில்
மருவு செங்கழு நீரோ நீ விடு – வடி வேலோ
மதன் விடும் கணையோ வாளோ சில
கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை
மறலி என்பவனோ மானோ மது – நுகர் கீத(ம்)
முகர வண்டினமோ வான் மேல் எழு
நிலவு அருந்து பு(ள்)ளோ மா தேவர் உண்
முதிய வெம் கடுவோ தேமா வடு – வகிரோ பார்
முடிவு எனும் கடலோ யாதோ என
உலவு கண் கொடு நேரே சூறை கொள்
முறை அறிந்த பசாசே போல்பவர் – உறவு ஆமோ
நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள்
தசமுகன் படை கோடா கோடிய
நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே – அடு போர் செய்
நெடியன் அங்கு அனுமானோடே எழுபது
வெ(ள்)ளம் கவி சேனா சேவித
நிருபன் அம்பரர் கோமான் ராகவன் – மருகோனே
சிகர உம்பர்கள் பாகீராதிகள்
பிரபை ஒன்று பிராசாதாதிகள்
சிவ சடங்கமொடு ஈசானாதிகள் – சிவ மோனர்
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள்
அயல் விளங்கு சுவாமீ காமரு
திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் – பெருமாளே
English
makara kuNdala meethE mOthuva
varuNa pangaya mOpU vOdaiyil
maruvu sengazhu neerO neevidu – vadivElO
mathanvi dungaNai yOvA LOsila
kayalkaL keNdaika LOsE lOkolai
maRali yenpava nOmA nOmathu – nukarkeetha
mukara vaNdina mOvAn mElezhu
nilava runthupu LOmA thEvaruN
muthiya vengadu vOthE mAvadu – vakirOpAr
mudive nungada lOyA thOvena
vulavu kaNkodu nErE cURaikoL
muRaiya Rinthapa sAsE pOlpava – ruRavAmO
nikaril vanjaka mAree sAthikaL
thasamu kanpadai kOdA kOdiya
nirutha rumpada vOrE vEviye – yadupOrsey
nediya nanganu mAnO dEyezhu
pathuve Langavi sEnA sEvitha
nirupa namparar kOmAn rAkavan – marukOnE
sikara vumparkaL pAkee rAthikaL
pirapai yonRupi rAsA thAthikaL
sivasa dangamo deesA nAthikaL – sivamOnar
theLiyu manthraka lApA yOkikaL
ayalvi Langusu vAmee kAmaru
thiruva lamchuzhi vAzhvE thEvarkaL – perumALE.
English Easy Version
makara kuNdala(m) meethE mOthuva
aruNa pangayamO pU Odaiyil
maruvu sengazhu neerO nee vidu – vadi vElO
mathan vidum kaNaiyO vALO sila
kayalkaL keNdaikaLO sElO kolai
maRali enpavanO mAnO mathu – nukar keetha(m)
mukara vaNdinamO vAn mEl ezhu
nilavu arunthu pu(L)LO mA thEvar uN
muthiya vem kaduvO thEmA vadu – vakirO pAr
mudivu enum kadalO yAthO ena
ulavu kaN kodu nErE cURai koL
muRai aRintha pasAsE pOlpavar – uRavu AmO
nikar il vanjaka mAreesa AthikaL
thasamukan padai kOdA kOdiya
nirutharum pada Or Ey EviyE – adu pOr sey
Nediyan angu anumAnOdE ezhu
pathu ve(L)Lam kavi sEnA sEvitha
nirupan amparar kOmAn rAkavan – marukOnE
sikara umparkaL pAkeerAthikaL
pirapai onRu pirAsAthAthikaL
siva sadangamodu eesAnAthikaL – siva mOnar
theLiyum manthra kalA pAy yOkikaL
ayal viLangu suvAmee kAmaru
thiru valamchuzhi vAzhvE thEvarkaL – perumALE.,