Thiruppugal 877 Thodutrukkadhala
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன – தனதான
தோடுற்றுக் காதள வோடிய
வேலுக்குத் தானிக ராயெழு
சூதத்திற் காமனி ராசத – விழியாலே
சோடுற்றத் தாமரை மாமுகை
போலக்கற் பூரம ளாவிய
தோல்முத்துக் கோடென வீறிய – முலைமானார்
கூடச்சிக் காயவ ரூழிய
மேபற்றிக் காதலி னோடிய
கூளச்சித் தாளனை மூளனை – வினையேனைக்
கோபித்துத் தாயென நீயொரு
போதத்தைப் பேசவ தாலருள்
கோடித்துத் தானடி யேனடி – பெறவேணும்
வேடிக்கைக் காரவு தாரகு
ணாபத்மத் தாரணி காரண
வீரச்சுத் தாமகு டாசமர் – அடுதீரா
வேலைக்கட் டாணிம காரத
சூரர்க்குச் சூரனை வேல்விடு
வேழத்திற் சீரரு ளூறிய – இளையோனே
ஆடத்தக் காருமை பாதியர்
வேதப்பொற் கோவண வாடையர்
ஆலித்துத் தானரு ளூறிய – முருகோனே
ஆடப்பொற் கோபுர மேவிய
ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை
யாறைப்பொற் கோயிலின் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன – தனதான
தோடு உற்றுக் காது அளவு ஓடிய
வேலுக்குத் தான் நிகர் ஆய் எழு
சூதத்தில் காமனி(ன்) இராசத – விழியாலே
சோடு உற்றத் தாமரை மா முகை
போலக் கற்பூரம் அளாவிய
தோல் முத்துக் கோடு என வீறிய – முலை மானார்
கூடச் சிக்காயவர் ஊழியமே
பற்றிக் காதலின் ஓடிய
கூள(னை)ச் சித்து ஆளனை மூளனை – வினையேனை
கோபித்துத் தாய் என நீ ஒரு
போதத்தைப் பேச அதால்
அருள் கோடித்துத் தான அடியேன் அடி – பெற வேணும்
வேடிக்கைக்கார உதார
குணா பத்மத் தாரணி காரண
வீரச் சுத்தா மகுடா சமர் – அடு தீரா
வேலைக் கட்டாணி மகாரத
சூரர்க்கு சூரனை வேல் விடு
வேழத்தில் சீர் அருள் ஊறிய – இளையோனே
ஆடத் தக்கார் உமை பாதியர்
வேதப் பொன் கோவண ஆடையர்
ஆலித்துத் தான் அருள் ஊறிய – முருகோனே
ஆடப் பொன் கோபுரம் மேவிய
ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறைப்
பொன் கோயிலின் மேவிய – பெருமாளே
English
thOdutRuk kAthaLa vOdiya
vElukkuth thAnika rAyezhu
cUthaththiR kAmani rAsatha – vizhiyAlE
sOdutRath thAmarai mAmukai
pOlakkaR pUrama LAviya
thOlmuththuk kOdena veeRiya – mulaimAnAr
kUdacchik kAyava rUzhiya
mEpatRik kAthali nOdiya
kULacchith thALanai mULanai – vinaiyEnaik
kOpiththuth thAyena neeyoru
pOthaththaip pEsava thAlaruL
kOdiththuth thAnadi yEnadi – peRavENum
vEdikkaik kAravu thAraku
NApathmath thAraNi kAraNa
veeracchuth thAmaku dAsamar – adutheerA
vElaikkat tANima kAratha
cUrarkkuc cUranai vElvidu
vEzhaththiR seeraru LURiya – iLaiyOnE
Adaththak kArumai pAthiyar
vEthappoR kOvaNa vAdaiyar
Aliththuth thAnaru LURiya – murukOnE
AdappoR kOpura mEviya
Adikkop pAmathiL cUzhpazhai
yARaippoR kOyilin mEviya – perumALE.
English Easy Version
thOdu utRuk kAthu aLavu Odiya
vElukkuth thAn nikar Ay ezhu
cUthaththil kAmani (n) irAsatha – vizhiyAlE
sOdu utRath thAmarai mA mukai
pOlak kaRpUram aLAviya
thOl muththuk kOdu ena veeRiya – mulai mAnAr
kUdac chikkAyavar UzhiyamE
patRik kAthalin Odiya
kULa (nai) siththu ALanai mULanai – vinaiyEnai
kOpiththuth thAy ena nee oru
pOthaththaip pEsa athAl aruL
kOdiththuth thAna adiyEn adi – peRa vENum
vEdikkaikkAra uthAra kuNA
pathmath thAraNi kAraNa
veerac chuththA makudA samar – adu theerA
vElaik kattANi makAratha
cUrarkku cUranai vEl vidu
vEzhaththil seer aruL URiya – iLaiyOnE
Adath thakkAr umai pAthiyar
vEthap pon kOvaNa Adaiyar
Aliththuth thAn aruL URiya – murukOnE
Adap pon kOpuram mEviya
Adikku oppA mathiL cUzh
pazhaiyARaip pon kOyilin mEviya – perumALE