திருப்புகழ் 878 திட்டெனப் பல (திருச்சக்கிரப்பள்ளி)

Thiruppugal 878 Thittenappala

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தத்தன தத்தன தத்தன
தத்த தத்தன தத்தன தத்தன
தத்த தத்தன தத்தன தத்தன – தனதான

திட்டெ னப்பல செப்பைய டிப்பன
பொற்கு டத்தையு டைப்பன வுத்தர
திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன – வதின்மேலே

செப்ப வத்திம ருப்பையொ டிப்பன
புற்பு தத்தையி மைப்பில ழிப்பன
செய்த்த லைக்கம லத்தைய லைப்பன – திறமேய

புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன
சித்த முற்பொர விட்டுமு றிப்பன
புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன – இளநீரைப்

புக்கு டைப்பன முத்திரை யிட்டத
னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல்
புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு – தருள்வாயே

துட்ட நிக்ரக சத்தித ரப்ரப
லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய
துட்க ரக்கவி தைப்புக லிக்கர – செனுநாமச்

சொற்க நிற்கசொ லட்சண தட்சண
குத்த ரத்தில கத்திய னுக்கருள்
சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் – முகநாத

தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ
ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக
சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி – மயிலேறி

சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்
மிக்க ரத்நம திற்புடை சுற்றிய
சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தத்தன தத்தன தத்தன
தத்த தத்தன தத்தன தத்தன
தத்த தத்தன தத்தன தத்தன – தனதான

திட்டு எனப் பல செப்பை அடிப்பன
பொன் குடத்தை உடைப்பன உத்தர
திக்கினில் பெரு வெற்பை விடுப்பன – அதின் மேலே

செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன
புற்பதத்தை இமைப்பில் அழிப்பன
செய்த் தலைக் கமலத்தை அலைப்பன – திறம் ஏய

புள் தனைக் ககனத்தில் விடுப்பன
சித்த முன் பொரவிட்டு முறிப்பன
புட்ப இக்கன் முடிக் குறி உய்ப்பன – இள நீரைப்

புக்கு உடைப்பன முத்திரை இட்ட
தனத்தை விற்பவர் பொய்க் கலவிக்கு உழல்
புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது – அருள்வாயே

துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல
ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய
துட்கர(ம்) கவிதைப் புகலிக்கு – அரச எனு(ம்)

நாமச் சொற்க(ம்) நிற்க சொல் லட்சண
தட்சண குத் தரத்தில் அகத்தியனுக்கு அருள்
சொல் குருத்வ(ம்) மகத்துவ சத்வ – ஷண்முக நாத

தட்டு அறச் சமையத்தை வளர்ப்பவள்
அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக
சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி – மயில் ஏறி

சட் பதத் திரள் மொய்த்த மணப் பொழில்
மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய
சக்கிரப்ப(ள்)ளி முக்கணர் பெற்று அருள் – பெருமாளே

English

thitte nappala cheppaiya dippana
poRku daththaiyu daippana vuththara
thikki niRperu veRpaivi duppana – vathinmElE

seppa vaththima ruppaiyo dippana
puRpu thaththaiyi maippila zhippana
seyththa laikkama laththaiya laippana – thiRamEya

putta naikkaka naththilvi duppana
siththa muRpora vittumu Rippana
putpa vikkanmu dikkuRi yuyppana – iLaneeraip

pukku daippana muththirai yittatha
naththai viRpavar poykkala vikkuzhal
puththi yutRamai yatRida eppozhu – tharuLvAyE

thutta nikraka saththitha raprapa
lapra siththasa marththatha mizhthraya
thutka rakkavi thaippuka likkara – senunAmac

choRka niRkaso latchaNa thatchaNa
kuththa raththila kaththiya nukkaruL
soRgu ruthvama kaththuva sathvashaN – mukanAtha

thatta Racchamai yaththaiva Larppava
Laththan muRpukazh seppava nukraka
saththu vaththaiya Liththidu seyppathi – mayilERi

satpa thaththiraL moyththama Nappozhil
mikka rathnama thiRpudai chutRiya
sakki rappaLi mukkaNar petRaruL – perumALE.

English Easy Version

thittu enap pala cheppai adippana
pon kudaththai udaippana uththara
thikkinil peru veRpai – viduppana athin mElE

seppa aththi maruppai odippana
puRpathaththai imaippil azhippana
seyth thalaik kamalaththai alaippana – thiRam Eya

puL thanaik kakanaththil viduppana
siththa mun poravittu muRippana
putpa ikkan mudik kuRi uyppana – iLa neeraip

pukku udaippana muththirai itta
thanaththai viRpavar poyk kalavikku uzhal
puththi utRamai atRida eppozhuthu – aruLvAyE

thutta nikraka saththithara prapala
prasiththa samarththa thamizh thraya
thutkara(m) kavithaip pukalikku – arasa enu(m) nAmac

choRka(m) niRka sol latchaNa thatchaNa
kuth tharaththil akaththiyanukku aruL
sol guruthva(m) makaththuva sathva – shaNmuga nAtha

thattu aRac chamaiyaththai vaLarppavaL
aththan mun pukazh seppa anukraka
saththuvaththai aLiththidu seyppathi – mayil ERi

sat pathath thiraL moyththa maNap pozhil
mikka rathna mathil pudai chutRiya
sakkirappa(L)Li mukkaNar petRu aruL – perumALE.