Thiruppugal 880 Kuriththanenjasai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன – தனதான
குறித்தநெஞ் சாசை விரகிகள்
நவிற்றுசங் கீத மிடறிகள்
குதித்தரங் கேறு நடனிகள் – எவரோடுங்
குறைப்படுங் காதல் குனகிகள்
அரைப்பணங் கூறு விலையினர்
கொலைக்கொடும் பார்வை நயனிகள் – நகரேகை
பொறித்தசிங் கார முலையினர்
வடுப்படுங் கோவை யிதழிகள்
பொருட்டினந் தேடு கபடிகள் – தவர்சோரப்
புரித்திடும் பாவ சொருபிகள்
உருக்குசம் போக சரசிகள்
புணர்ச்சிகொண் டாடு மருளது – தவிர்வேனோ
நெறித்திருண் டாறு பதமலர்
மணத்தபைங் கோதை வகைவகை
நெகிழ்க்குமஞ் சோதி வனசரி – மணவாளா
நெருக்குமிந்த் ராதி யமரர்கள்
வளப்பெருஞ் சேனை யுடையவர்
நினைக்குமென் போலு மடியவர் – பெருவாழ்வே
செறித்தமந் தாரை மகிழ்புனை
மிகுத்ததண் சோலை வகைவகை
தியக்கியம் பேறு நதியது – பலவாறுந்
திரைக்கரங் கோலி நவமணி
கொழித்திடுஞ் சாரல் வயலணி
திருக்குரங் காடு துறையுறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன – தனதான
குறித்த நெஞ்சு ஆசை விரகிகள்
நவிற்று சங்கீத மிடறிகள்
குதித்து அரங்கு ஏறு நடனிகள் – எவரோடும்
குறைப் படும் காதல் குனகிகள்
அரைப்பணம் கூறு(ம்) விலையினர்
கொலைக் கொடும் பார்வை நயனிகள் – நக ரேகை
பொறித்த சிங்கார முலையினர்
வடுப் படும் கோவை இதழிகள்
பொருள் தினம் தேடு(ம்) கபடிகள் – தவர் சோரப்
புரித்திடும் பாவ சொருபிகள்
உருக்கு சம்போக சரசிகள்
புணர்ச்சி கொண்டாடு மருள் அது – தவிர்வேனோ
நெறித்து இருண்டு ஆறு பத மலர்
மணத்த பைங் கோதை வகை வகை
நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி – மணவாளா
நெருக்கும் இந்த்ராதி அமரர்கள்
வளப் பெரும் சேனை உடையவர்
நினைக்கும் என் போலும் அடியவர் – பெரு வாழ்வே
செறித்த மந்தாரை மகிழ் புனை
மிகுத்த தண் சோலை வகை வகை
தியக்கி அம்பேறு நதி அது – பலவாறும்
திரைக் கரம் கோலி நவ மணி
கொழித்திடும் சாரல் வயல் அணி
திருக் குரங்காடு துறை உறை – பெருமாளே.
English
kuRiththanen jAsai virakikaL
navitRusang keetha midaRikaL
kuthiththarang kERu nadanikaL – evarOdung
kuRaippadung kAthal kunakikaL
araippaNang kURu vilaiyinar
kolaikkodum pArvai nayanikaL – nakarEkai
poRiththasing kAra mulaiyinar
vaduppadung kOvai yithazhikaL
poruttinan thEdu kapadikaL – thavarsOrap
puriththidum pAva sorupikaL
urukkusam pOka sarasikaL
puNarcchikoN dAdu maruLathu – thavirvEnO
neRiththiruN dARu pathamalar
maNaththapaing kOthai vakaivakai
nekizhkkuman jOthi vanasari – maNavALA
nerukkuminth rAthi yamararkaL
vaLapperunj chEnai yudaiyavar
ninaikkumen pOlu madiyavar – peruvAzhvE
seRiththaman thArai makizhpunai
mikuththathaN cOlai vakaivakai
thiyakkiyam pERu nathiyathu – palavARun
thiraikkarang kOli navamaNi
kozhiththidunj cAral vayalaNi
thirukkurang kAdu thuRaiyuRai – perumALE.
English Easy Version
kuRiththa nenju Asai virakikaL
navitRu sangeetha midaRikaL
kuthiththu arangu ERu nadanikaL – evarOdum
kuRaip padum kAthal kunakikaL
araippaNam kURu(m) vilaiyinar
kolaik kodum pArvai nayanikaL – naka rEkai
poRiththa singAra mulaiyinar
vadup padum kOvai ithazhikaL
poruL thinam thEdu(m) kapadikaL – thavar sOrap
puriththidum pAva sorupikaL
urukku sampOka sarasikaL
puNarcchi koNdAdu maruL athu – thavirvEnO
neRiththu iruNdu ARu patha malar
maNaththa paing kOthai vakai vakai
nekizhkkum manju Othi vanasari – maNavALA
nerukkum inthrAthi amararkaL
vaLap perum cEnai udaiyavar
ninaikkum en pOlum adiyavar – peru vAzhvE
seRiththa manthArai makizh punai
mikuththa thaN sOlai vakai vakai
thiyakki ampERu nathi athu – palavARum
thiraik karam kOli nava maNi
kozhiththidum cAral vayal aNi
thiruk kurangkAdu thuRai uRai – perumALE.,