Thiruppugal 881 Kudangkalnirai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனந்த தனத்தான தனந்த தனத்தான
தனந்த தனத்தான – தனதான
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார
வடங்கள் அசைத்தார – செயநீலங்
குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது
குளிர்ந்த முகப்பார்வை – வலையாலே
உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
யுலந்து மிகக்கோலு – மகலாதே
உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு
முரங்கொள பொற்பாத – மருள்வாயே
விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட
விதங்கொள் முதற்பாய – லுறைமாயன்
விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
விளங்கு முகிற்கான – மருகோனே
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
தழங்கு மியற்பாடி – யளிசூழத்
தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
தலங்க ளிசைப்பான – பெருமாளே.
பதம் பிரித்தது
தனந்த தனத்தான தனந்த தனத்தான
தனந்த தனத்தான – தனதான
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர
வடங்கள் அசைத்தார – செய நீலம்
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழைக் காது(ம்)
குளிர்ந்த முகப் பார்வை – வலையாலே
உடம்பும் அறக் கூனி நடந்து மிகச் சாறி
உலந்து மிகக் கோலும் – அகலாதே
உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும்
உரம் கொள பொன் பாதம் – அருள்வாயே
விடங்கள் கதுப்பு ஏறு படங்கண் நடித்து ஆட
அ(வ்)விதம் கொள் முதல் பாயல் – உறை மாயன்
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு
விளங்கும் முகிற்கு ஆன – மருகோனே
தடம் கொள் வரைச் சாரல் நளுங்கும் மயில் பேடை
தழங்கும் இயல் பாடி – அளி சூழ
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும்
தலங்கள் இசைப்பான – பெருமாளே
English
kudangaL niraiththERu thadangaL kuRiththAra
vadangaL asaiththAra – seyaneelang
kuthampai yidaththERu vadintha kuzhaikkAthu
kuLirntha mukappArvai – valaiyAlE
udampu maRakkUni nadanthu mikacchARi
yulanthu mikakkOlu – makalAthE
uRangi vizhippAya piRantha piRappEnu
murangoLa poRpAtha – maruLvAyE
vidangaL kathuppERu padanga NadiththAda
vithangoL muthaRpAya – luRaimAyan
vilangai muRiththOdi yidangaL vaLaiththERu
viLangu mukiRkAna – marukOnE
thadangoL varaicchAral naLungu mayiRpEdai
thazhangu miyaRpAdi – yaLicUzhath
thayangu vayaRchAral kurangu kuthiththAdu
thalanga LisaippAna – perumALE.
English Easy Version
kudangaL niraiththu ERu thadangaL kuRiththu Ara
vadangaL asaiththAra – seya neelam
kuthampai idaththu ERu vadintha kuzhaik kAthu(m)
kuLirntha mukap pArvai – valaiyAlE
udampum aRak kUni nadanthu mikac chARi
ulanthu mikak kOlum – akalAthE
uRangi vizhippu Aya piRantha piRappEnum
uram koLa pon pAtham – aruLvAyE
vidangaL kathuppu ERu padangaN nadiththu Ada
a(v)vitham koL muthal pAyal – uRai mAyan
vil angai muRinthu Odi idangaL vaLaiththu ERu
viLangum mukiRku Ana – marukOnE
thadam koL varaic chAral naLungum mayil pEdai
thazhangum iyal pAdi – aLi cUzha
thayangum vayal sAral kurangu kuthiththu Adum
thalangaL isaippAna – perumALE