திருப்புகழ் 882 மானை நேர்விழி (காவளூர்)

Thiruppugal 882 Manainervizhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன – தனதான

மானை நேர்விழி யொத்தம டந்தையர்
பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்
வாச மாமலர் கட்டும ரம்பைய – ரிருதோளும்

மார்பு மீதினு முத்துவ டம்புரள்
காம பூரண பொற்கட கம்பொர
வாரி நீலவ ளைக்கைபு லம்பிட – அநுராகம்

ஆன நேரில்வி தத்திர யங்களும்
நாண மாறம யக்கியி யம்பவும்
ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் – உறவாடி

ஆர வாரந யத்தகு ணங்களில்
வேளி னூல்களை கற்றவி ளம்பவும்
ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை – யடைவேனோ

சான கீதுய ரத்தில ருஞ்சிறை
போன போதுதொ குத்தசி னங்களில்
தாப சோபமொ ழிப்பஇ லங்கையு – மழிவாகத்

தாரை மானொரு சுக்கிரி பன்பெற
வாலி வாகுத லத்தில்வி ழுந்திட
சாத வாளிதொ டுத்தமு குந்தனன் – மருகோனே

கான வேடர்சி றுக்குடி லம்புன
மீதில் வாழித ணத்திலு றைந்திடு
காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு – மணிமார்பா

காவு லாவிய பொற்கமு கின்திரள்
பாளை வீசம லர்த்தட முஞ்செறி
காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன
தான தானன தத்தன தந்தன – தனதான

மானை நேர் விழி ஒத்த மடந்தையர்
பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர்
வாச மா மலர் கட்டும் அரம்பையர் – இரு தோளும்

மார்பு மீதினு(ம்) முத்து வடம் புரள்
காம பூரண பொன் கடகம் பொர
வாரி நீல வளைக் கை புலம்பிட – அநுராகம்

ஆன நேரில் விதத் திரயங்களும்
நாண(ம்) மாற மயக்கி இயம்பவும்
ஆடை சோர நெகிழ்த்தி இரங்கவும் – உறவாடி

ஆரவார நயத்த குணங்களில்
வேளி(ன்) நூல்களை கற்ற விளம்பவும்
ஆகு(ம்) மோக விபத்தும் ஒழிந்து உனை – அடைவேனோ

சானகீ துயரத்தில் அரும் சிறை
போன போது தொகுத்த சினங்களில்
தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் – அழிவாக

தாரை மான் ஒரு சுக்கிரிபன் பெற
வாலி வாகு தலத்தில் விழுந்திட
சாத வாளி தொடுத்த முகுந்தனன் – மருகோனே

கான வேடர் சிறு குடில் அம் புன(ம்)
மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு
காவல் கூரு(ம்) குறத்தி புணர்ந்திடும் – மணி மார்பா

கா உலாவிய பொன் கமுகின் திரள்
பாளை வீச மலர்த் தடமும் செறி
காவளூர் தனில் முத்தமிழும் தெரி – பெருமாளே

English

mAnai nErvizhi yoththama danthaiyar
pAlai nErmozhi yoththuvi Lampiyar
vAsa mAmalar kattuma rampaiya – riruthOLum

mArpu meethinu muththuva dampuraL
kAma pUraNa poRkada kampora
vAri neelava Laikkaipu lampida – anurAkam

Ana nErilvi thaththira yangaLum
nANa mARama yakkiyi yampavum
Adai sOrane kizhththiyi rangavum – uRavAdi

Ara vArana yaththaku NangaLil
vELi nUlkaLai katRavi Lampavum
Aku mOkavi paththumo zhinthunai – yadaivEnO

sAna keethuya raththila rumchiRai
pOna pOthutho kuththasi nangaLil
thApa sOpamo zhippai langaiyu – mazhivAkath

thArai mAnoru sukkiri panpeRa
vAli vAkutha laththilvi zhunthida
sAtha vALitho duththamu kunthanan – marukOnE

kAna vEdarsi Rukkudi lampuna
meethil vAzhitha Naththilu Rainthidu
kAval kUruku Raththipu Narnthidu – maNimArpA

kAvu lAviya poRkamu kinthiraL
pALai veesama larththada mumcheRi
kAva LUrthanil muththami zhuntheri – perumALE.

English Easy Version

mAnai nEr vizhi oththa madanthaiyar
pAlai nEr mozhi oththu viLampiyar
vAsa mA malar kattum arampaiyar – iru thOLum

mArpu meethinu(m) muththu vadam puraL
kAma pUraNa pon kadakam pora
vAri neela vaLaik kai pulampida – anurAkam

Ana nEril vithath thirayangaLum
nANa(m) mARa mayakki iyampavum
Adai sOra nekizhththi irangavum – uRavAdi

AravAra nayaththa kuNangaLil
vELi(n) nUlkaLai katRa viLampavum
Aku(m) mOka vipaththum ozhinthu unai – adaivEnO

sAnakee thuyaraththil arum siRai
pOna pOthu thokuththa sinangaLil
thApa sOpam ozhippa ilangaiyum – azhivAka

thArai mAn oru sukkiripan peRa
vAli vAku thalaththil vizhunthida
sAtha vALi thoduththa mukunthanan – marukOnE

kAna vEdar siRu kudil am puna(m)
meethil vAzh ithaNaththil uRainthidu
kAval kUru(m) kuRaththi puNarnthidum – maNi mArpA

kA ulAviya pon kamukin thiraL
pALai veesa malarth thadamum seRi
kAvaLUr thanil muththamizhum theri – perumALE