திருப்புகழ் 884 அம்பு ராசியில் (தஞ்சை)

Thiruppugal 884 Amburasiyil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தானனத் தந்த தானனத்
தந்த தானனத் – தனதான

அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்
தஞ்ச வேமணிக் – குழைவீசும்

அங்க ணாரிடத் தின்ப சாகரத்
தங்கி மூழ்குமிச் – சையினாலே

எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்
திந்த்ர சாலஇப் – ப்ரமைதீர

இங்கு வாவெனப் பண்பி னாலழைத்
தெங்கு மானமெய்ப் – பொருள்தாராய்

கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
கொண்டல் போல்குழற் – கனமேருக்

குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோலசற் – குணவேலா

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் – குருநாதா

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்த தானனத் தந்த தானனத்
தந்த தானனத் – தனதான

அம்பு ராசியில் கெண்டை சேலொளித்து
அஞ்சவே மணிக் – குழைவீசும்

அங்க(ண்)ணாரிடத்து இன்ப சாகரத்து
அங்கி மூழ்கும் – இச்சையினாலே

எம்பிரான் உனைச் சிந்தியாது ஒழித்து
இந்த்ர சால இப் – ப்ரமைதீர

இங்கு வாவெனப் பண்பினால் அழைத்து
எங்குமான மெய்ப் – பொருள்தாராய்

கொம்பு போல் இடைத் தொண்டை போல் இதழ்க்
கொண்டல் போல்குழல் – கனமேருக்

குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோலசற் – குணவேலா

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் – குருநாதா

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் – பெருமாளே

English

ampu rAsiyiR keNdai sEloLith
thanja vEmaNik – kuzhaiveesum

anga NAridath thinpa sAkarath
thangi mUzhkumic – chaiyinAlE

empi rAnunaic chinthi yAthozhith
thinthra sAlaip – pramaitheera

ingu vAvenap paNpi nAlazhaith
thengu mAnameyp – poruLthArAy

kompu pOlidaith thoNdai pOlithazhk
koNdal pOlkuzhaR – kanamEruk

kunRu pOlmulaip paingi rAthiyaik
koNda kOlasaR – kuNavElA

sampa rAriyaik konRa theevizhic
campu pOthakak – kurunAthA

saNda kOpurac cempon mALikaith
thanjai mAnakarp – perumALE.

English Easy Version

ampu rAsiyil keNdai sEloLiththu
anjavE maNik – kuzhaiveesum

anga(N)Naridaththu inpa sAkaraththu
angi mUzhkum – icchaiyinAlE

empirAn unaic chinthiyAthu ozhiththu
inthra sAla ip – pramaitheera

ingu vAvenap paNpinAl azhaiththu
engumAna meyp – poruLthArAy

kompu pOl idaith thoNdai pOl ithazhk
koNdal pOlkuzhal – kanamEruk

kunRu pOlmulaip paingi rAthiyaik
koNda kOlasaR – kuNavElA

sampa rAriyaik konRa theevizhic
campu pOthakak – kurunAthA

saNda kOpurac cempon mALikaith
thanjai mAnakarp – perumALE