திருப்புகழ் 886 மரு உலாவிடும் (சப்தஸ்தானம்)

Thiruppugal 886 Maruulavidum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன – தனதான

மருவு லாவிடு மோதி குலைப்பவர்
சமர வேலெனு நீடு விழிச்சியர்
மனதி லேகப டூரு பரத்தைய – ரதிகேள்வர்

மதன னோடுறழ் பூச லிடைச்சியர்
இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்
மதுர மாமொழி பேசு குணத்தியர் – தெருமீதே

சருவி யாரையும் வாவெ னழைப்பவர்
பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை – யணுகாதே

சலச மேவிய பாத நினைத்துமுன்
அருணை நாடதி லோது திருப்புகழ்
தணிய வோகையி லோத எனக்கருள் – புரிவாயே

அரிய கானக மேவு குறத்திதன்
இதணி லேசில நாளு மனத்துடன்
அடவி தோறுமெ வாழி யல்பத்தினி – மணவாளா

அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
உழவர் சாகர மோடி யொளித்திட
அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட – நினைவோனே

திருவின் மாமர மார்ப ழனப்பதி
அயிலு சோறவை யாளு துறைப்பதி
திசையி னான்மறை தேடி யமுற்குடி – விதியாதிச்

சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
திருவை யாறுட னேழு திருப்பதி – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன – தனதான

மரு உலாவிடும் ஓதி குலைப்பவர்
சமர வேல் எனு(ம்) நீடு விழிச்சியர்
மனதிலே கபடு ஊரு பரத்தையர் – ரதி கேள்வர்

மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர்
இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர்
மதுர மா மொழி பேசு(ம்) குணத்தியர் – தெரு மீதே

சருவி யாரையும் வா என அழைப்பவர்
பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை – அணுகாதே

சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன்
அருணை நாடு அதில் ஓது திருப்புகழ்
தணிய ஓகையில் ஓத எனக்கு – அருள் புரிவாயே

அரிய கானகம் மேவும் குறத்தி தன்
இதணிலே சில நாளு(ம்) மனத்துடன்
அடவி தோறுமெ வாழ் இயல் பத்தினி – மணவாளா

அசுரர் வீடுகள் நூறு பொடிப் பட
உழவர் சாகரம் ஓடி ஒளித்திட
அமரர் நாடு பொன் மாரி மிகுத்திட – நினைவோனே

திருவின் மா மரம் ஆர் பழனப் பதி
யிலும் சோறவை ஆளு(ம்) துறைப் பதி
திசையில் நான் மறை தேடிய முன் குடி – விதி ஆதிச்

சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி
திருவையாறுடன் ஏழு திருப்பதி – பெருமாளே

English

maruvu lAvidu mOthi kulaippavar
samara vElenu needu vizhicchiyar
manathi lEkapa dUru paraththaiya – rathikELvar

mathana nOduRazh pUsa lidaicchiyar
iLainja rAruyir vAzhu mulaicchiyar
mathura mAmozhi pEsu kuNaththiyar – therumeethE

saruvi yAraiyum vAve nazhaippavar
poruLi lEveku Asai parappikaL
sakala thOthaka mAyai padipparai – yaNukAthE

salasa mEviya pAtha ninaiththumun
aruNai nAdathi lOthu thiruppukazh
thaNiya vOkaiyi lOtha enakkaruL – purivAyE

ariya kAnaka mEvu kuRaththithan
ithaNi lEsila nALu manaththudan
adavi thORume vAzhi yalpaththini – maNavALA

asurar veedukaL nURu podippada
uzhavar sAkara mOdi yoLiththida
amarar nAdupon mAri mikuththida – ninaivOnE

thiruvin mAmara mArpa zhanappathi
ayilu sORavai yALu thuRaippathi
thisaiyi nAnmaRai thEdi yamuRkudi – vithiyAthi

siramu mAnilam veezhtha rumeyppathi
pathuma nAyagan vAzhpa thineyppathi
thiruvai yARuda nEzhu thiruppathi – perumALE.

English Easy Version

maru ulAvidum Othi kulaippavar
samara vEl enu(m) needu vizhicchiyar
manathilE kapadu Uru paraththaiyar – rathi kELvar

mathananOdu uRazh pUsal idaicchiyar
iLainjar Aruyir vAzhum mulaicchiyar
mathura mA mozhi pEsu(m) kuNaththiyar – theru meethE

aruvi yAraiyum vA ena azhaippavar
poruLilE veku Asai parappikaL
sakala thOthaka mAyai padipparai – aNukAthE

salasam mEviya pAtha(m) ninaiththu mun
aruNai nAdu athil Othu thiruppukazh
thaNiya Okaiyil Otha enakku aruL – purivAyE

ariya kAnakam mEvum kuRaththi than
ithaNilE sila nALu(m) manaththudan
adavi thORume vAzh iyal paththini – maNavALA

asurar veedukaL nURu podip pada
uzhavar sAkaram Odi oLiththida
amarar nAdu pon mAri mikuththida – ninaivOnE

thiruvin mA maram Ar pazhanap pathi
ayilum sORavai ALu(m) thuRaip pathi
thisaiyil nAn maRai thEdiya mun kudi – vithi Athis

siramum mA nilam veezh tharu meyppathi
pathuma nAyagan vAzh pathi neyppathi
thiruvaiyARudan Ezhu thiruppathi – perumALE