திருப்புகழ் 889 முகிலைக் காரை (திருநெய்த்தானம்)

Thiruppugal 889 Mugilaikkarai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன – தனதான

முகிலைக் காரைச் சருவிய குழலது
சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் – முகம்வேர்வ

முனையிற் காதிப் பொருகணை யினையிள
வடுவைப் பானற் பரிமள நறையிதழ்
முகையைப் போலச் சமர்செயு மிருவிழி – குழைமோதத்

துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
பருகிக் காதற் றுயரற வளநிறை
துணைபொற் றோளிற் குழைவுற மனமது – களிகூரச்

சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத
நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை
துவளக் கூடித் துயில்கினு முனதடி – மறவேனே

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் – களமீதே

குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு – குமரேசா

செகசெச் சேசெச் செகவென முரசொலி
திகழச் சூழத் திருநட மிடுபவர்
செறிகட் காளப் பணியணி யிறையவர் – தருசேயே

சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
கலசத் தாமத் தனகிரி தழுவிய
திருநெய்த் தானத் துறைபவ சுரபதி – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன – தனதான

English

mukilaik kAraic charuviya kuzhalathu
sariyath thAmath thodaivakai nekizhthara
muLarip pUvaip panimathi thanainikar – mukamvErva

munaiyiR kAthip porukaNai yinaiyiLa
vaduvaip pAnaR parimaLa naRaiyithazh
mukaiyaip pOlac chamarseyu miruvizhi – kuzhaimOthath

thukiraik kOvaik kanithanai nikarithazh
parukik kAthat RuyaraRa vaLaniRai
thuNaipot ROLiR kuzhaivuRa manamathu – kaLikUrac

chudarmuth thArap paNiyaNi mrukamatha
niRaipoR pArath thiLakiya mukizhmulai
thuvaLak kUdith thuyilkinu munathadi – maRavEnE

kukukuk kUkuk kukukuku kukuvena
thimithith theethith thimithiyen murasodu
kuzhumic cheeRic chamarseyu masurarkaL – kaLameethE

kuzhaRik kULith thiraLezha vayiravar
kuviyak kUdik koduvara alakaikaL
kuNalit tAdip pasikeda ayilvidu – kumarEsA

sekasec chEsec chekavena murasoli
thikazhac cUzhath thirunada midupavar
cheRikat kALap paNiyaNi yiRaiyavar – tharusEyE

sikarap pArak kiriyuRai kuRamakaL
kalasath thAmath thanakiri thazhuviya
thiruneyth thAnath thuRaipava surapathi – perumALE.

English Easy Version