திருப்புகழ் 890 விகட சங்கட (திருப்பழுவூர்)

Thiruppugal 890 Vigadasangkada

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன – தனதான

விகட சங்கட வார்த்தை பேசிகள்
அவல மங்கைய ரூத்தை நாறிகள்
விரிவ டங்கிட மாற்றும் வாறென – வருவார்தம்

விதம்வி தங்களை நோக்கி யாசையி
லுபரி தங்களை மூட்டி யேதம
இடும ருந்தொடு சோற்றை யேயிடு – விலைமாதர்

சகல மஞ்சன மாட்டி யேமுலை
படவ ளைந்திசை மூட்டி யேவரு
சரச இங்கித நேத்தி யாகிய – சுழலாலே

சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
மலர வுந்தியை வாட்டி யேயிடை
தளர வுங்கணை யாட்டும் வேசிய – ருறவாமோ

திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
தமையர் தம்பியர் மூத்த தாதையர்
திலக மைந்தரை யேற்ற சூரரை – வெகுவான

செனம டங்கலு மாற்றி யேயுடல்
தகர அங்கவர் கூட்டை யேநரி
திருகி யுண்டிட ஆர்த்த கூளிக – ளடர்பூமி

அகடு துஞ்சிட மூட்டு பாரத
முடிய அன்பர்க ளேத்த வேயரி
யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் – மருகோனே

அமர ரந்தணர் போற்ற வேகிரி
கடல திர்ந்திட நோக்கு மாமயில்
அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன
தனன தந்தன தாத்த தானன – தனதான

English

vikada sangada vArththai pEsikaL
avala mangaiya rUththai nARikaL
viriva dangida mAtRum vARena – varuvArtham

vithamvi thangaLai nOkki yAsaiyi
lupari thangaLai mUtti yEthama
iduma runthodu sOtRai yEyidu – vilaimAthar

sakala manjana mAtti yEmulai
padava Lainthisai mUtti yEvaru
sarasa ingitha nEththi yAkiya – suzhalAlE

sathimu zhangida vAyppa NAnathu
malara vunthiyai vAtti yEyidai
thaLara vungaNai yAttum vEsiya – ruRavAmO

thikiri koNdiru LAkki yEyiru
thamaiyar thampiyar mUththa thAthaiyar
thilaka maintharai yEtRa cUrarai – vekuvAna

senama dangalu mAtRi yEyudal
thakara angavar kUttai yEnari
thiruki yuNdida Arththa kULika – LadarpUmi

akadu thunjida mUttu pAratha
mudiya anparka LEththa vEyari
yaruLu maintharkaL vAzhththu mAyavan – marukOnE

amara ranthaNar pOtRa vEkiri
kadala thirnthida nOkku mAmayil
azhako dumpazhu vUrkkuL mEviya – perumALE.

English Easy Version