திருப்புகழ் 891 சதங்கை மணி (பெரும்புலியூர்)

Thiruppugal 891 Sadhangkaimani

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தனன தானத் தனந்தனன தானத்
தனந்தனன தானத் – தனதான

சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் – புயமீதே

தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற் – குழையாட

இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக் – குழலாரோ

டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத் – தருவாயே

சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற் – றிடுவோனே

சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் – களைவோனே

பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக் – கொருபாலா

பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தனன தானத் தனந்தனன தானத்
தனந்தனன தானத் – தனதான

English

sathangaimaNi veerac chilampinisai pAda
sarangaLoLi veesap – puyameethE

thanangaLkuva dAdap padarnthapoRi mAlpoR
sarangaNmaRi kAthiR – kuzhaiyAda

ithangoLmayi lEroth thukanthanakai pEsut
Rirampaiyazha kArmaik – kuzhalArO

dizhainthamaLi yOdut Razhunthumenai neesat
Rirangiyiru thALaith – tharuvAyE

sithamparaku mArak kadamputhodai yAdac
chiRanthamayil mElut – RiduvOnE

sivanthakazhu kAdap piNangaLmalai sAyac
chinanthasurar vEraik – kaLaivOnE

pethumpaiyezhu kOlac cheyankoLsiva kAmip
prasaNdApi rAmik – korupAlA

perumpunama thEkik kuRampeNodu kUdip
perumpuliyur vAzhpoR – perumALE.

English Easy Version