திருப்புகழ் 895 கருகி அறிவு அகல (அத்திப்பட்டு)

Thiruppugal 895 Karugiarivuagala

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன – தனதான

கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி – லிடைபோடாக்

கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் – வழியேபோய்

மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் – மலராலே


மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் – தருவாயே

பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி – லுறமேவும்

புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் – மருகோனே


அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு – மிளையோனே


அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன – தனதான

கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கிக் கிளைஞர்
கதறி அழ விரவு பறை முட்டக் கொட்டி இட
கனக மணி சிவிகையில் அமர்த்திக் கட்டையினில் – இடை போடா

கர மலர் கொடு அரிசியினை இட்டுச் சித்ர மிகு
கலையை உரி செய்து மறைகள் பற்றப் பற்று கனல்
கண கண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் – வழியே போய்

மருவு புனல் முழுகி மனை புக்குத் துக்கம் அறு
மனிதர் தமை உறவு நிலை சுட்டுச் சுட்டி உற
மகிழ்வு செய்து அழுது பட வைத்து அத் துட்டன் மதன் – மலராலே

மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக
மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி
வழியை இது வழி என உரைத்துப் பொன் கழல்கள் – தருவாயே

பொருவு இல் மலை அரையன் அருள் பச்சைச் சித்ர மயில்
புரம் எரிய இரணிய தனுக் கைப் பற்றி இயல்
புதிய முடுகு அரிய தவம் உற்றுக் கச்சியினில் – உற மேவும்

புகழ் வனிதை தரு புதல்வ பத்துக் கொத்து முடி
புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக் கடவுள்
பொறி அரவின் மிசை துயிலு(ம்) சுத்தப் பச்சை முகில் – மருகோனே

அரிய மரகத மயிலில் உற்றுக் கத்து கடல்
அது சுவற அசுரர் கிளை கெட்டுக் கட்டை அற
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு – இளையோனே

அருண மணி வெயில் பரவு பத்துத் திக்கும் மிகும்
அழகு பொதி மதர் மகுட தத்தித் தத்தி வளர்
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை – பெருமாளே.

English

karukiyaRi vakalavuyir vittuk kikkiLainjar
kathaRiyazha viravupaRai muttak kottiyida
kanakamaNi sivikaiyila marththik kattaiyini – lidaipOdAk

karamalarko darisiyinai yittuc chithramiku
kalaiyaipuri seythumaRaikaL patRap patRukanal
kaNakaNena eriyavudal suttuk kakshiyavar – vazhiyEpOy

maruvupunal muzhukimanai pukkuth thukkamaRu
manitharthamai yuRavunilai suttuc chuttiyuRa
makizhvuseythu azhuthupada vaiththath thuttanmathan – malarAlE

mayalviLaiya arivaiyarkaL kaippat teyththumika
manamazhiyu madimaiyaini naiththuc chorkkapathi
vazhiyaiyithu vazhiyenavu raiththup poRkazhalkaL – tharuvAyE

poruvinmalai yaraiyanaruL pacchaic chithramayil
purameriya iraNiyatha nukkaip patRiyiyal
puthiyamudu kariyathava mutRuk kacchiyini – luRamEvum

pukazhvanithai tharuputhalva paththuk koththumudi
puyamirupa thaRavumeytha chakrak kaikkadavuL
poRiyaravin misaithuyilu suththap pacchaimukil – marukOnE

ariyamara kathamayili lutRuk kaththukada
lathusuvaRa asurarkiLai kettuk kattaiyaRa
amararpathi yiniyakudi vaiththaR kutRamiku – miLaiyOnE

aruNamaNi veyilparavu paththuth thikkumiku
mazhakupothi matharmakuda thaththith thaththivaLar
aNiyakaya lukaLumvayal aththip pattiluRai – perumALE.

English Easy Version

karuki aRivu akala uyir vittu ukkik kiLainjar
kathaRi azha viravu paRai muttak kotti ida
kanaka maNi sivikaiyil amarththik kattaiyinil – idai pOdA

kara malar kodu arisiyinai ittuc chithra miku
kalaiyai uri seythu maRaikaL patRap patRu kanal
kaNa kaNa ena eriya udal suttu kakshiyavar – vazhiyE pOy

maruvu punal muzhuki manai pukkuth thukkam aRu
manithar thamai uRavu nilai suttuc chutti uRa
makizhvu seythu azhuthu pada vaiththu ath thuttan mathan – malarAlE

mayal viLaiya arivaiyarkaL kaippattu eyththu mika
manam azhiyum adimaiyai ninaiththu sorkka pathi
vazhiyai ithu vazhi ena uraiththup pon kazhalkaL – tharuvAyE

poruvu il malai araiyan aruL pacchaic chithra mayil
puram eriya iraNiya thanuk kaip patRi iyal
puthiya muduku ariya thavam utRuk kacchiyinil – uRa mEvum

pukazh vanithai tharu puthalva paththuk koththu mudi
puyam irupathu aRavum eytha sakrak kaik kadavuL
poRi aravin misai thuyilu(m) suththap pacchai mukil – marukOnE

ariya marakatha mayilil utRuk kaththu kadal
athu suvaRa asurar kiLai kettuk kattai aRa
amarar pathi iniya kudi vaiththaRku utRa miku – iLaiyOnE

aruNa maNi veyil paravu paththuth thikkum mikum
azhaku pothi mathar makuda thaththith thaththi vaLar
aNiya kayal ukaLum vayal aththippattil uRai – perumALE.