திருப்புகழ் 897 விந்துபேதித்த (கந்தனூர்)

Thiruppugal 897 Vindhubedhiththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனா தத்தனா தந்தனா தத்தனா
தந்தனா தத்தனா – தந்ததான

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
மின்சரா சர்க்குலமும் – வந்துலாவி

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
மிஞ்சநீ விட்டவடி – வங்களாலே

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
வந்துதா இக்கணமெ – யென்றுகூற

மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
வந்துசே யைத்தழுவல் – சிந்தியாதோ

அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
மங்கிபார் வைப்பறையர் – மங்கிமாள

அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்
அண்டரே றக்கிருபை – கொண்டபாலா

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
எந்தைபா கத்துறையு – மந்தமாது

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
எந்தைபூ சித்துமகிழ் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்தனா தத்தனா தந்தனா தத்தனா
தந்தனா தத்தனா – தந்ததான

English

vinthupE thiththavadi vangaLA yeththisaiyu
minsarA sarkkulamum – vanthulAvi

viNdupOy vittavudal sinthaithA nutRaRiyu
minjanee vittavadi – vangaLAlE

vanthunA yiRkadaiya nonthunjA nappathavi
vanthuthA ikkaName – yenRukURa

maintharthA vippukazha thanthaithA yutRuruki
vanthusE yaiththazhuval – sinthiyAthO

anthakA raththilidi yenpavAy vittuvaru
mangipAr vaippaRaiyar – mangimALa

angaivEl vittaruLi yinthralO kaththinmakizh
aNdarE Rakkirupai – koNdabAlA

enthanA vikkuthavu chanthrasEr vaiccadaiyar
enthaipA kaththuRaiyu – manthamAthu

engumAy niRkumoru kanthanUr saththipukazh
enthaipU ciththumakizh – thambirAnE.

English Easy Version