திருப்புகழ் 898 ஈயெறும்பு நரி (வாலிகொண்டபுரம்)

Thiruppugal 898 Eeyerumbunari

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன – தந்ததான

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத – வும்பல்போலே

ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில
ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச – னங்கள்பேசிச்

சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லூத தண்டிகையி – லந்தமாகச்

சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனது பாத தொண்டனென – அன்புதாராய்

சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு – பங்கினோடச்

சோதி யந்தபிர மாபு ரந்தரனு
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத – லன்புகூர

வாது கொண்டவுணர் மாள செங்கையயி
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட – னங்கொள்வோனே

வாச கும்பதன மானை வந்துதினை
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
வாலி கொண்டபுர மேய மர்ந்துவளர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன – தந்ததான

English

ee eRumbu nari nAy kaNang kazhugu
kAga muNba udalE sumandhu idhu
Elva dhendru madhamE mozhindhu madha – umbal pOlE

Edhu mendranida kOlenum parivu
mEvi nambi idhu pOdhu menga sila
rEydha nangaL thani vAgu chinthai vacha – nangaL pEsi

seetha thongal azhagA aNindhu maNam
veesa mangaiyargaL Ada veNkavari
seeRa kombu kuzhalUdha thaNdigaiyil – anthamAga

sEr ganam periya vAzhvu koNduzhalum
Asai vendhida vunAsai minji siva
sEvai kaNdunadhu pAdha thoNdan ena – anbuthArAy

sUdhi rundhavidar mEyi ruNdagiri
sUrar vendhu podiyAgi mangivizha
sUriyan puravi thEr nadandhu nadu – panginOda

jOthi andha biramA purandharanum
Adhi antha mudhal dhEvarun thozhudhu
sUzha mandril nata mAdum endhai mudhal – anbukUra

vAdhu koNdavuNar mALa senkai ayi
lEvi aNdarkudi ERa vinjaiyargaL
mAdhar chinthai kaLi kUra nindru natanang – koLvOnE

vAsa kumba thana mAnai vandhu thinai
kAval koNda murugA eNum periya
vAli koNdapura mEya marndhu vaLar – thambirAnE.

English Easy Version