திருப்புகழ் 901 ஆரம் முலை காட்டி (வயலூர்)

Thiruppugal 901 Arammulaikatti

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த – தனதான

ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
யாடையணி காட்டி – அநுராக

ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
ஆதரவு காட்டி – எவரோடும்

ஈரநகை காட்டி நேரமிகை காட்டி
யேவினைகள் காட்டி – யுறவாடி

ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி
யீடழிதல் காட்ட – லமையாதோ

வீரவப ராட்டு சூரர்படை காட்டில்
வீழனலை யூட்டி – மயிலூர்தி

வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு
வேலைவிளை யாட்டு – வயலூரா

சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
சீலிகுற வாட்டி – மணவாளா

தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி
தேவர்சிறை மீட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த – தனதான

ஆரம் முலை காட்டி மார நிலை காட்ட
ஆடை அணி காட்டி – அநுராக

ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி
ஆதரவு காட்டி – எவரோடும்

ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே
வினைகள் காட்டி – உறவாடி

ஏதம் மயல் காட்டும் மாதர் வலை காட்டி
ஈடு அழிதல் காட்டல் – அமையாதோ

வீர அபர ஆட்டு சூரர் படை காட்டில்
வீழ அனலை ஊட்டி – மயில் ஊர்தி

வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு
வேலை விளையாட்டு – வயலூரா

மலை நாட்டில் சேர வாரமுடன் வேட்ட
சீலி குறவாட்டி – மணவாளா

தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி
தேவர் சிறை மீட்ட – பெருமாளே

English

Aramulai kAtti mAranilai kAtti
yAdaiyaNi kAtti – anurAka

Alavizhi kAtti Osaimozhi kAtti
Atharavu kAtti – evarOdum

eeranakai kAtti nEramikai kAtti
yEvinaikaL kAtti – yuRavAdi

Ethamayal kAttu mAtharvalai kAtti
yeedazhithal kAtta – lamaiyAthO

veeravapa rAttu cUrarpadai kAttil
veezhanalai yUtti – mayilUrthi

vElaiyuRai neetti vElaithani lOttu
vElaiviLai yAttu – vayalUrA

sEramalai nAttil vAramudan vEtta
seelikuRa vAtti – maNavALA

thEsupukazh theetti yAsaivaru kOtti
thEvarsiRai meetta – perumALE.

English Easy Version

Aram mulai kAtti mAra nilai kAtti
Adai aNi kAtti – anurAka

Ala vizhi kAtti Osai mozhi kAtti
Atharavu kAtti – evarOdum

eera nakai kAtti nEra mikai kAttiyE
vinaikaL kAtti – uRavAdi

Etham mayal kAttum mAthar valai kAtti
eedu azhithal kAttal – amaiyAthO

veera apara Attu cUrar padai kAttil
veezha analai Utti – mayil Urthi

vElai uRai neetti vElai thanil Ottu
vElai viLaiyAttu – vayalUrA

malai nAttil sEra vAramudan vEtta
seeli kuRavAtti – maNavALA

thEsu pukazh theetti Asai varu kOtti
thEvar siRai meetta – perumALE