திருப்புகழ் 903 இலகு முலைவிலை (வயலூர்)

Thiruppugal 903 Ilagumulaivilai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்
எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் – எவரோடும்

இனிய நயமொழி பழகிக ளழகிகள்
மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்
யமனு மிகையென வழிதரு முழிதரும் – விழிவாளால்

உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்
சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்
உறவு சொலவல துரகிகள் விரகிகள் – பிறைபோலே

உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
பகடி யிடவல கபடிகள் முகடிகள்
உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக – ளுறவாமோ

அலகை புடைபட வருவன பொருவன
கலக கணநிரை நகுவன தகுவன
அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன – பொடியாடி

அலரி குடதிசை யடைவன குடைவன
தரும வநிதையு மகிழ்வன புகழ்வன
அகில புவனமு மரகர கரவென – அமர்வேள்வி

திலக நுதலுமை பணிவரு செயமகள்
கலையி னடமிட வெரிவிரி முடியினர்
திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட – மயிலேறிச்

சிறிது பொழுதினி லயில்விடு குருபர
அறிவு நெறியுள அறுமுக இறையவ
த்ரிசிர கிரியயல் வயலியி லினிதுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

English

ilaku mulaivilai yasadikaL kasadikaL
kalaikaL palavaRi theruLikaL maruLikaL
eyiRu kadipadu muthadikaL pathadikaL – evarOdum

iniya nayamozhi pazhakika LazhakikaL
madaiyar poruLpeRa maruvikaL saruvikaL
yamanu mikaiyena vazhitharu muzhitharum – vizhivALAl

ulaka midarseyu nadalikaL madalikaL
siluku silarodu pukalika LikalikaL
uRavu solavala thurakikaL virakikaL – piRaipOlE

ukirkai kuRiyidu kamukikaL samukikaL
pakadi yidavala kapadikaL mukadikaL
uNarvu kedumvakai paruvika Luruvika – LuRavAmO

alakai pudaipada varuvana poruvana
kalaka kaNanirai nakuvana thakuvana
asurar thasaivazhi nnimirvana thimirvana – podiyAdi

alari kudathisai yadaivana kudaivana
tharuma vanithaiyu makizhvana pukazhvana
akila puvanamu marakara karavena – amarvELvi

thilaka nuthalumai paNivaru seyamakaL
kalaiyi nadamida veriviri mudiyinar
thiraLpa luyirudal kuvaduka Lenanada – mayilERi

siRithu pozhuthini layilvidu gurupara
aRivu neRiyuLa aRumuka iRaiyava
thrisira kiriyayal vayaliyi linithuRai – perumALE.

English Easy Version