திருப்புகழ் 905 கடல்போற் கணைவிழி (வயலூர்)

Thiruppugal 905 Kadalporkanaivizhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனாத் தனதன தனனாத் தனதன
தனனாத் தனதன – தனதான

கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
கனிபோற் றுகிரிதழ் – எழிலாகும்

கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
கடிபோற் பணியரை – யெனவாகும்

உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
ளுடையாற் கெறுவித – நடையாலும்

ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்
ஒழியாத் துயரது – தவிரேனோ

குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
கொளிவாய்ப் பலஅல – கைகள்பேய்கள்

கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
குடியேற் றியகுக – வுயர்தாழை

மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி
வயலூர்ப் பதிதனி – லுறைவோனே

மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
மகள்மேற் ப்ரியமுள – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனாத் தனதன தனனாத் தனதன
தனனாத் தனதன – தனதான

கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல்
கனி போல் துகிர் இதழ் – எழிலாகும்

கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை
கடி போல் பணி அரை – எனவாகும்

உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள்
உடையால் கெறுவித – நடையாலும்

ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல் படும்
ஒழியாத் துயர் அது – தவிரேனோ

குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி
கொளிவாய்ப் பல அலகைகள் – பேய்கள்

கொலை போர்க் களம் மிசை தினம் ஏற்று
அமரர்கள் குடி ஏற்றிய குக – உயர் தாழை

மடல் கீற்றினில் எழு விரைபூப்பொழில் செறி
வயலூர்ப் பதி தனில் – உறைவோனே

மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை
மகள் மேல் ப்ரியம் உ(ள்)ள – பெருமாளே

English

kadalpOR kaNaivizhi silaipOR piRainuthal
kanipOt Rukirithazh – ezhilAkum

karipOR kirimulai kodipOt Rudiyidai
kadipOR paNiyarai – yenavAkum

udalkAt tinimaiyi lezhilpAth thiramiva
LudaiyAR keRuvitha – nadaiyAlum

orunAt pirivathu marithAyc chuzhalpadum
ozhiyAth thuyarathu – thavirEnO

kudaleerth thasurarka LudalkAk kaikaLnari
koLivAyp palaala – kaikaLpEykaL

kolaipOrk kaLamisai thinamEt RamararkaL
kudiyEt Riyakuka – vuyarthAzhai

madalkeet Rinilezhu viraipUp pozhilseRi
vayalUrp pathithani – luRaivOnE

malaimER kudiyuRai koduvEt tuvarudai
makaLmER priyamuLa – perumALE.

English Easy Version

kadal pOl kaNai vizhi silai pOl piRai nuthal
kani pOl thukir ithazh – ezhilAkum

kari pOl kiri mulai kodi pOl thudi idai
kadi pOl paNi arai – enavAkum

udal kAttu inimaiyil ezhil pAththiram ivaL
udaiyAl keRuvitha – nadaiyAlum

oru nAL pirivathum arithAy suzhal padum
ozhiyAth thuyar athu – thavirEnO

kudal eerththu asurarkaL udal kAkkaikaL nari
koLivAyp pala alakaikaL – pEykaL

kolai pOrk kaLam misai thinam EtRu amararkaL
kudi EtRiya kuka – uyar thAzhai

madal keetRinil ezhu viraipUppozhil seRi
vayalUrp pathi thanil – uRaivOnE

malai mEl kudi uRai kodu vEttuvarudai
makaL mEl priyam u(L)La – perumALE.