Thiruppugal 906 Kamalaththekulavum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன – தனதான
கமலத் தேகு லாவு மரிவையை
நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
கலகக் காம நூலை முழுதுண – ரிளைஞோர்கள்
கலவிக் காசை கூர வளர்பரி
மளகற் பூர தூம கனதன
கலகத் தாலும் வானி னசையுமி – னிடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
வதனத் தாலு நாத முதலிய
விரவுற் றாறு கால்கள் சுழலிருள் – குழலாலும்
வெயிலெப் போதும் வீசு மணிவளை
அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்
விழியிற் பார்வை யாலு மினியிடர் – படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணி
கனகத் தேர்கள் யானை யவுணர்கள்
தகரக் கூர்கொள் வேலை விடுதிற – லுருவோனே
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்
புகழக் கானி லாடு பரிபுர
சரணத் தேக வீர அமைமன – மகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதி
மகள்மெய்த் தோயு நாத குறமகள்
அணையச் சூழ நீத கரமிசை – யுறுவேலா
அருளிற் சீர்பொ யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில் மருவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன – தனதான
English
kamalath thEku lAvu marivaiyai
nikarpoR kOla mAthar maruLtharu
kalakak kAma nUlai muzhuthuNa – riLainjOrkaL
kalavik kAsai kUra vaLarpari
maLakaR pUra thUma kanathana
kalakath thAlum vAni nasaiyumi – nidaiyAlum
vimalac chOthi rUpa imakara
vathanath thAlu nAtha muthaliya
viravut RARu kAlkaL suzhaliruL – kuzhalAlum
veyilep pOthum veesu maNivaLai
aNipot ROLka LAlum vaduvakir
vizhiyiR pArvai yAlu miniyidar – paduvEnO
samariR pUtham yALi paripiNi
kanakath thErkaL yAnai yavuNarkaL
thakarak kUrkoL vElai viduthiRa – luruvOnE
samukap pEykaL vAzhi yenaethir
pukazhak kAni lAdu paripura
saraNath thEka veera amaimana – makizhveerA
amarark keesa nAna sasipathi
makaLmeyth thOyu nAtha kuRamakaL
aNaiyac sUzha neetha karamisai – yuRuvElA
aruLiR cheerpo yAtha gaNapathi
thiruvak keesan vAzhum vayaliyin
azhakuk kOyil meethil maruviya – perumALE.
English Easy Version