Thiruppugal 907 Kamaiatraseer
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதத்த தானான தனதத்த தானான
தனதத்த தானான – தந்ததான
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
களையுற்று மாயாது – மந்த்ரவாதக்
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது – கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு – நண்புளோர்செய்
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம் – வந்துதாராய்
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
மதுதுக்க மேயாக – மிஞ்சிடாமல்
அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்
அருணச்சி காநீல – கண்டபார
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி
மலநிட்க ளாமாயை – விந்துநாதம்
வரசத்தி மேலான பரவத்து வேமேலை
வயலிக்குள் வாழ்தேவர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனதத்த தானான தனதத்த தானான
தனதத்த தானான – தந்ததான
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர்
களை உற்று மாயாது – மந்த்ர வாத
கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது – கொண்டு பூணும்
சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது
சகளத்து உளே நாளு(ம்) – நண்பு உளோர் செய்
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது
சலனப் படா ஞானம் – வந்து தாராய்
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம்
அது துக்கமே ஆக – மிஞ்சிடாமல்
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர்
அருண சிகா நீல – கண்ட பாரம்
மம பட்ச மா தேவர் அருமைச் சுவாமீ
நிமல நிட்களா மாயை – விந்து நாதம்
வர சத்தி மேலான பர வத்துவே மேலை
வயலிக்குள் வாழ் தேவர் – தம்பிரானே
English
kamaiyatRa seerkEdr vekutharkka kOlAlar
kaLaiyutRu mAyAthu – manthravAthak
kadaiketta ApAtha muRusithra kOmALar
karumaththin mAyAthu – koNdupUNunj
samayaththa rAsAra niyamaththin mAyAthu
sakaLaththu LEnALu – naNpuLOrsey
sariyaikri yAyOka niyamaththin mAyAthu
salanappa dAnjAnam – vanthuthArAy
amriRsu rApAna thithiputhra rAlOka
mathuthukka mEyAka – minjidAmal
adamitta vElveera thiruvotRi yUrnAthar
aruNacchi kAneela – kaNdapAra
mamapatcha mAthEva rarumaic cuvAmeeni
malanitka LAmAyai – vinthunAtham
varasaththi mElAna paravaththu vEmElai
vayalikkuL vAzhthEvar – thambirAnE.
English Easy Version
kamai atRa seer kEdar veku tharkka kOlAlar
kaLai utRu mAyAthu – manthra vAtha
kadai ketta ApAtham uRu sithra kOmALar
karumaththin mAyAthu – koNdu pUNum
samayaththar AsAra niyamaththin mAyAthu
sakaLaththu uLE nALu(m) – naNpu uLOr sey
sariyai kriyA yOka niyamaththin mAyAthu
salanap padA njAnam – vanthu thArAy
amaril surA pAna thithi puthrar AlOkam
athu thukkamE Aka – minjidAmal
adam itta vEl veera thiruvotRiyUr nAthar
aruNa sikA neela – kaNda pAram
mama patcha mA thEvar arumaic suvAmee
nimala nitkaLA mAyai – vinthu nAtham
vara saththi mElAna para vaththuvE mElai
vayalikkuL vAzh thEvar – thambirAnE.