திருப்புகழ் 908 குருதி கிருமிகள் (வயலூர்)

Thiruppugal 908 Kuruthikirumigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலவு பலபணி பரிமள மறுசுவை – மடைபாயல்

குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல – மொருநாலு

சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகிய
தொலைவி லுனைநினை பவருற வலதினி – யயலார்பால்

சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
முறவு மலமல மருளலை கடல்கழி
துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற – அருள்வாயே

விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
விகட இறகுகள் பறையிட அலகைகள் – நடமாட

விபுத ரரகர சிவசிவ சரணென
விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் – வடிவேலா

மருது நெறுநெறு நெறுவென முறிபட
வுருளு முரலொடு தவழரி மருகசெ
வனச மலர்சுனை புலிநுழை முழையுடை – யவிராலி

மலையி லுறைகிற அறுமுக குருபர
கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
வயலி நகரியி லிறையவ அருள்தரு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

English

kuruthi kirumikaL salamala mayirthasai
maruvu muruvamu malamala mazhakodu
kulavu palapaNi parimaLa maRusuvai – madaipAyal

kuLiri laRaiyaka mivaikaLu malamala
manaivi makavanai yanusarkaL muRaimuRai
kunaku kiLainjarka LivarkaLu malamala – morunAlu

suruthi vazhimozhi sivakalai yalathini
yulaka kalaikaLu malamala milakiya
tholaivi lunaininaip pavaruRa valathini – yayalArpAl

suzhalva thinithena vasamudan vazhipadu
muRavu malamala maruLalai kadalkazhi
thuRaice laRivinai yenathuLa makizhvuRa – aruLvAyE

viruthu murasukaL mokumoku mokuvena
mukuRa kakapathi mukilthikazh mukadathil
vikada iRakukaL paRaiyida alakaikaL – nadamAda

viputha rarakara sivasiva saraNena
viravu kathirmuthi rimakaran valamvara
vinaikoL nisisarar podipada adalseyum – vadivElA

maruthu neRuneRu neRuvena muRipada
vuruLu muralodu thavazhari marukase
vanasa malarsunai pulinuzhai muzhaiyudai – yavirAli

malaiyi luRaikiRa aRumuka gurupara
kayalu mayilaiyu makaramu mukaLsenel
vayali nakariyi liRaiyava aruLtharu – perumALE.

English Easy Version