திருப்புகழ் 910 கோவை வாயிதழ் (வயலூர்)

Thiruppugal 910 kOvaivAyidhazh (vayalUr)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தான தனத்தந் தான தான தனத்தந்
தான தான தனத்தந் – தனதான

கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்
கோதை மாதர் முலைக்குங் – குறியாலும்

கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்
கோதி வாரி முடிக்குங் – குழலாலும்

ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்
டாசை யாயி னுநித்தந் – தளராதே

ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொ ருவர்க்கொன்
றாடல் தாள்க ளெனக்கின் – றருள்வாயே

சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்
த்யாக சீல குணத்தன் – திருமாலும்

தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்
தேயு வான நிறத்தன் – புதல்வோனே

காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்
காவி சூழ்வ யலிக்கும் – ப்ரியமானாய்

காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்
கால னாடல் தவிர்க்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தான தனத்தந் தான தான தனத்தந்
தான தான தனத்தந் – தனதான

English

kOvai vAyi thazhukkun thAka pOka maLikkung
kOthai mAthar mulaikkung – kuRiyAlum

kOla mAlai vaLaikkun thOLi nAlu maNaththang
kOthi vAri mudikkung – kuzhalAlum

Avi kOdi yavikkunj chEli nAlu mayakkuN
dAsai yAyi nuniththan – thaLarAthE

Asi lAtha maRaikkun thEdo NAtho ruvarkkon
RAdal thALka Lenakkin – RaruLvAyE

sEvi lERu niruththan thOkai pAka naLikkun
thyAka seela kuNaththan – thirumAlum

thEdo NAtha pathaththan theethi lAtha manaththan
thEyu vAna niRaththan – puthalvOnE

kAvi dAtha thiruchcheng kOdu nAdu thanakkung
kAvi cUzhva yalikkum – priyamAnAy

kAthi mOthi yethirkkunj cUra theerar pramikkung
kAla nAdal thavirkkum – perumALE.

English Easy Version