திருப்புகழ் 911 தாமரையின் மட்டு (வயலூர்)

Thiruppugal 911 Thamaraiyinmattu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தனத்த தானன தனத்த
தானன தனத்த – தனதான

தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி – லடியேனைத்

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி – யவிராலி

மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் – மனதாசை

மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த – மறவேனே

காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க – நதிவேணி

கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் – குருநாதா

சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று – வயலூரா

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தனத்த தானன தனத்த
தானன தனத்த – தனதான

தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பில் – அடியேனை

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்திய – விராலி

மாமலையில் நிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்து – என்மனதாசை

மாசினை அறுத்து ஞானமுது அளித்த
வாரம் இனி நித்த – மறவேனே

காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க – நதி வேணி

கானிலுறை புற்றில் ஆடுபணி யிட்ட
காது உடைய அப்பர் – குருநாதா

சோமனொடு அருக்கன் மீனுலவு
மிக்க சோலை புடைசுற்று – வயலூரா

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த – பெருமாளே

English

thAmaraiyin mattu vAsamalar oththa
thALiNai ninaippil – adiyEnai

dhAthavizh kadukkai nAga magizh kaRpa
dhAru vena meththi – yavirAli

mAmalai yiniRpa neekarudhi yutru
vAvana azhaiththen – manadhAsai

mAsinai aRuththu nyAnamudh aLiththa
vAra mini niththa – maRavEnE

kAmanai eriththa thee nayana netri
kAdhiya suvarga – nadhivENi

kAnilurai putril Adu paNi yitta
kAdhudaiya appar – gurunAthA

sOmano darukkan meenulavu mikka
sOlai pudai sutru – vayalUrA

sUdiya thadakkai vElkodu viduththu
sUrthalai thuNiththa – perumALE.

English Easy Version

thAmaraiyin mattu vAsamalar oththa
thALiNai ninaippil – adiyEnai

dhAthavizh kadukkai nAga magizh kaRpa
dhAru vena meththi ya – virAli

mAmalai yiniRpa neekarudhi yutru
vAvana azhaiththu – en manadhAsai

mAsinai aRuththu nyAnamudh aLiththa
vAra mini niththa – maRavEnE

kAmanai eriththa thee nayana netri
kAdhiya suvarga – nadhivENi

kAnilurai putril Adu paNi yitta
kAdhu udaiya appar – gurunAthA

sOmano darukkan meenulavu
mikka sOlai pudai sutru – vayalUrA

sUdiya thadakkai vElkodu viduththu
sUrthalai thuNiththa – perumALE