திருப்புகழ் 912 திரு உரூப நேராக (வயலூர்)

Thiruppugal 912 Thiruurubaneraga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள் – கலைமூடுஞ்

சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார – வினையேனைக்

கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமீநின் – மயில்வாழ்வுங்

கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு – மறவேனே

சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி – புதல்வோனே

சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகச மான சாரீசெ – யிளையோனே

மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
வரையில் வீசு தாள்மாயன் – மருகோனே

மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

திரு உரூப நேராக அழகதான மா மாய
திமிர மோக மானார்கள் – கலை மூடும்

சிகரி ஊடு தே மாலை அடவி ஊடு போய் ஆவி
செருகும் மால் அனாசார – வினையேனை

கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு
கனவில் ஆள் சுவாமீ நின் – மயில் வாழ்வும்

கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்) மாறாத
கழலு(ம்) நீப வேல் வாகு(ம்) – மறவேனே

சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி
சயில நாரி பாக ஆதி – புதல்வோனே

சத மகீ வல் போர் மேவு குலிச பாணி மால் யானை
சகசமான சாரீ செய் – இளையோனே

மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒ(ண்)ணாவான
வரையில் வீசு தாள் மாயன் – மருகோனே

மநு நியாய சோ (ழ) நாடு தலைமை யாகவே மேலை
வயலி மீது வாழ் தேவர் – பெருமாளே

English

thiruvu rUpa nErAka azhaka thAna mAmAya
thimira mOka mAnArkaL – kalaimUdunj

sikari yUdu thEmAlai yadavi yUdu pOyAvi
seruku mAla nAsAra – vinaiyEnaik

karuvi zhAthu seerOthi yadimai pUNa lAmARu
kanavi lALsu vAmeenin – mayilvAzhvung

karuNai vAri kUrEka mukamum veera mARAtha
kazhalu neepa vElvAku – maRavEnE

saruva thEva thEvAthi namasi vAya nAmAthi
sayila nAri pAkAthi – puthalvOnE

sathama keeval pOrmEvu kulisa pANi mAlyAnai
sakasa mAna sAreese – yiLaiyOnE

maruvu lOka meerEzhu maLavi dAvo NAvAna
varaiyil veesu thALmAyan – marukOnE

manuni yAya sONAdu thalaimai yAka vEmElai
vayali meethu vAzhthEvar – perumALE.

English Easy Version

thiru urUpa nErAka azhakathAna mA mAya
thimira mOka mAnArkaL – kalai mUdum

sikari Udu thE mAlai adavi Udu pOy Aavi
serukum mAl anAsAra – vinaiyEnai

karu vizhAthu seer Othi adimai pUNalAmARu
kanavil AL suvAmee nin – mayil vAzhvum

karuNai vAri kUr Eka mukamum veera(m)
mARAtha kazhalu(m) neepa vEl vAku(m) – maRavEnE

saruva thEva thEvAthi namasivAya nAmAthi
sayila nAri pAka Athi – puthalvOnE

satha makee val pOr mEvu kulisa pANi mAl yAnai
sakasamAna sAree sey – iLaiyOnE

maruvu lOkam eerEzhum aLavida o(N)NAvAna
varaiyil veesu thAL mAyan – marukOnE

manu niyAya sO(zha) nAdu thalaimai yAkavE mElai
vayali meethu vAzh thEvar – perumALE