திருப்புகழ் 913 நெய்த்த சுரி (வயலூர்)

Thiruppugal 913 Neyththasuri

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா – தனதான

நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ – இனிதூறும்


நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
சுத்த மிடறது வளையோ கமுகோ
நிற்கு மிளமுலை குடமோ மலையோ – அறவேதேய்ந்

தெய்த்த இடையது கொடியோ துடியோ
மிக்க திருவரை அரவோ ரதமோ
இப்பொ னடியிணை மலரோ தளிரோ – எனமாலாய்

இச்சை விரகுடன் மடவா ருடனே
செப்ப மருளுட னவமே திரிவேன்
ரத்ந பரிபுர இருகா லொருகால் – மறவேனே

புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே – உமையாள்தன்

புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் – வருவோனே

சத்த முடையஷண் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
சத்தி கணபதி யிளையா யுளையா – யொளிகூருஞ்

சக்ர தரஅரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்ப முளதட வயலூ ரியலூர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா – தனதான

நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ
பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ
நெட்டை இணை விழி கணையோ பிணையோ – இனிது ஊறும்

நெக்க அமுது இதழ் கனியோ துவரோ
சுத்த மிடறு அது வளையோ கமுகோ
நிற்கும் இள முலை குடமோ மலையோ – அறவே தேய்ந்து

எய்த்த இடை அது கொடியோ துடியோ
மிக்க திரு அரை அரவோ ரதமோ
இப் பொன் அடி இணை மலரோ தளிரோ – என மாலாய்

இச்சை விரகுடன் மடவாருடனே
செப்ப மருள் உடன் அவமே திரிவேன்
ரத்ந பரிபுர(ம்) இரு கால் ஒரு கால் – மறவேனே

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திரு நீறு இடவே
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே – உமையாள் தன்

புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல்
கற்ற தவ முனி பிரமா புரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் – வருவோனே

சத்தம் உடைய ஷண்முகனே குகனே
வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா
சத்தி கணபதி இளையாய் உளையாய் – ஒளி கூரும்

சக்ரதர அரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்பம் உள தட வயலூர் இயலூர் – பெருமாளே

English

neyththa curikuzha laRalO mukilO
pathma naRunuthal silaiyO piRaiyO
nettai yiNaivizhi kaNaiyO piNaiyO – inithURum

nekka amuthithazh kaniyO thuvarO
suththa midaRathu vaLaiyO kamukO
niRku miLamulai kudamO malaiyO – aRavEthEyn

theyththa idaiyathu kodiyO thudiyO
mikka thiruvarai aravO rathamO
ippo nadiyiNai malarO thaLirO – enamAlAy

icchai virakudan madavA rudanE
seppa maruLuda navamE thirivEn
rathna paripura irukA lorukAl – maRavEnE

puththa ramaNarkaL mikavE kedavE
theRku narapathi thirunee RidavE
pukka analvaya mikaE duyavE – umaiyALthan

puthra nenaisai pakarnUl maRainUl
katRa thavamuni piramA puramvAzh
poRpa kavuNiyar perumA nuruvAy – varuvOnE

saththa mudaiyashaN mukanE gukanE
veRpi leRisuda rayilA mayilA
saththi kaNapathi yiLaiyA yuLaiyA – yoLikUrum

chakra tharaari marukA murukA
ukra iRaiyavar puthalvA muthalvA
thatpa muLathada vayalU riyalUr – perumALE.

English Easy Version

neyththa curi kuzhal aRalO mukilO
pathma naRu nuthal silaiyO piRaiyO
nettai iNai vizhi kaNaiyO piNaiyO – inithu URum

nekka amuthu ithazh kaniyO thuvarO
suththa midaRu athu vaLaiyO kamukO .
niRkum iLa mulai kudamO malaiyO – aRavE thEynthu

eyththa idai athu kodiyO thudiyO
mikka thiru arai aravO rathamO
ip pon adi iNai malarO thaLirO – ena mAlAy

icchai virakudan madavArudanE
seppa maruL udan avamE thirivEn
rathna paripura(m) iru kAl oru kAl – maRavEnE

puththar amaNarkaL mikavE kedavE
theRku narapathi thiru neeRu idavE
pukka anal vayam mika Edu uyavE – umaiyAL than

puthran ena isai pakar nUl maRai nUl
katRa thava muni piramA puram vAzh
poRpa kavuNiyar perumAn uruvAy – varuvOnE

saththam udaiya shaNmuganE guganE
veRpil eRi sudar ayilA mayilA
saththi kaNapathi iLaiyAy uLaiyAy – oLi kUrum

chakrathara ari marukA murukA
ukra iRaiyavar puthalvA muthalvA
thatpam uLa thada vayalUr iyalUr – perumALE