திருப்புகழ் 914 முலை மறைக்கவும் (வயலூர்)

Thiruppugal 914 Mulaimaraikkavum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன – தனதான

முலைம றைக்கவும் வாசலி லேதலை
மறைய நிற்கவும் ஆசையு ளோரென
முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு – முகமோடே

முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு
நகம ழுத்தவும் லீலையி லேயுற
முறைம சக்கவும் வாசமு லாமல – ரணைமீதே

கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி
கறைய ழிக்கவு நானென வேயணி – விலையீதே

கடிய சத்திய மாமென வேசொலி
யவர்கொ டப்பண மாறிட வீறொடு
கடுக டுத்திடு வாரொடு கூடிய – தமையாதோ

மலையை மத்தென வாசுகி யேகடை
கயிறெ னத்திரு மாலொரு பாதியு
மருவு மற்றது வாலியு மேலிட – அலையாழி

வலய முட்டவொ ரோசைய தாயொலி
திமிதி மித்திமெ னாவெழ வேயலை
மறுகி டக்கடை யாவெழ மேலெழு – மமுதோடே

துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
வயலை யற்புத னேவினை யானவை
தொடர றுத்திடு மாரிய கேவலி – மணவாளா

துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு
துகள றுத்தணி யாரழ காசுரர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன – தனதான

முலை மறைக்கவும் வாசலிலே தலை
மறைய நிற்கவும் ஆசை உ(ள்)ளோர் என
முகிழ் நகைச் சிறு தூதினை ஏவவும் – முகம் ஓடே

முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவு(ம்)
நகம் அழுத்தவும் லீலையிலே உற
முறை மசக்கவும் வாசம் உலா மலர் – அணை மீதே

கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர்
உடல் சளப்பட நாள் வழி நாள் வழி
கறை அழிக்கவும் நான் எனவே அ(ண்)ணி – விலை ஈதே

கடிய சத்தியமாம் எனவே சொ(ல்)லி
அவர் கொடு அப்பணம் மாறிட வீறொடு
கடுகடுத்திடுவாரொடு கூடியது – அமையாதோ

மலையை மத்து என வாசுகியே கடை
கயிறு எனத் திருமால் ஒரு பாதியும்
மருவும் மற்றது வாலியும் மேல் இட – அலை ஆழி

வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி
திமிதி மித்திம் எனா எழவே அலை
மறுகிடக் கடையா எழ மேல் எழும் – அமுதோடே

துலை வருத் திரு மா மயில் வாழ்வுள
வயலை அற்புதனே வினையானவை
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி – மணவாளா

துவள் கடிச் சிலை வேள் பகைவா திரு
மறு ஒர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் – பெருமாளே

English

mulaima Raikkavum vAsali lEthalai
maRaiya niRkavum Asaiyu LOrena
mukizhna kaicchiRu thUthinai yEvavu – mukamOdE

mukama zhuththavum AsaikaL kURavu
nakama zhuththavum leelaiyi lEyuRa
muRaima sakkavum vAsamu lAmala – raNaimeethE

kalaine kizhkkavum vAlipa rAnavar
udalsa Lappada nALvazhi nALvazhi
kaRaiya zhikkavu nAnena vEyaNi – vilaiyeethE

kadiya saththiya mAmena vEsoli
yavarko dappaNa mARida veeRodu
kaduka duththidu vArodu kUdiya – thamaiyAthO

malaiyai maththena vAsuki yEkadai
kayiRe naththiru mAloru pAthiyu
maruvu matRathu vAliyu mElida – alaiyAzhi

valaya muttavo rOsaiya thAyoli
thimithi miththime nAvezha vEyalai
maRuki dakkadai yAvezha mElezhu – mamuthOdE

thulaiva ruththiru mAmayil vAzhvuLa
vayalai yaRputha nEvinai yAnavai
thodara Ruththidu mAriya kEvali – maNavALA

thuvaLka dicchilai vELpakai vAthiru
maRuvo rettuda nAyira mEloru
thukaLa RuththaNi yArazha kAsurar – perumALE.

English Easy Version

mulai maRaikkavum vAsalilE thalai
maRaiya niRkavum Asai u(L)LOr ena
mukizh nakaic chiRu thUthinai Evavum – mukam OdE

mukam azhuththavum AsaikaL kURavu(m)
nakam azhuththavum leelaiyilE
uRa muRai masakkavum vAsam ulA malar – aNai meethE

kalai nekizhkkavum vAlipar Anavar
udal saLappada nAL vazhi
nAL vazhi kaRai azhikkavum nAn enavE a(N)Ni – vilai eethE

kadiya saththiyamAm enavE so(l)li
avar kodu appaNam mARida veeRodu
kadukaduththiduvArodu kUdiyathu – amaiyAthO

malaiyai maththu ena vAsukiyE kadai
kayiRu enath thirumAl oru pAthiyum
maruvum matRathu vAliyum mEl ida – alai Azhi

valaya mutta or OsaiyathAy oli
thimithi miththim enA ezhavE alai
maRukidak kadaiyA ezha mEl ezhum – amuthOdE

thulai varuth thiru mA mayil vAzhvuLa
vayalai aRputhanE vinaiyAnavai
thodar aRuththidum Ariya kEvali – maNavALA

thuvaL kadic chilai vEL pakaivA thiru
maRu or ettudan Ayiram mEl oru
thukaL aRuththu aNi Ar azhakA surar – perumALE.