திருப்புகழ் 915 மேகலை நெகிழ்த்து (வயலூர்)

Thiruppugal 915 Megalainegizhththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
வேல்விழி புரட்டிக் காட்டி – யழகாக

மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
வீடுக ளழைத்துக் காட்டி – மதராசன்

ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
யாரொடு நகைத்துக் காட்டி – விரகாலே

ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை யவர்க்குக் காட்டி – யழிவேனோ

மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு – குருநாதா

மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
மூரிவில் மதற்குக் காட்டு – வயலூரா

வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டு – மிளையோனே

மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார் குழல் விரித்துக் காட்டி
வேல் விழி புரட்டிக் காட்டி – அழகாக

மேனியை மினுக்கிக் காட்டி நாடகம் நடித்துக் காட்டி
வீடுகள் அழைத்துக் காட்டி – மத ராசன்

ஆகமம் உரைத்துக் காட்டி வார் அணி தனத்தைக் காட்டி
யாரொடு(ம்) நகைத்துக் காட்டி – விரகாலே

ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை அவர்க்குக் காட்டி – அழிவேனோ

மோகன விருப்பைக் காட்டி ஞானமும் எடுத்துக் காட்டி
மூ தமிழ் முனிக்குக் கூட்டு – குருநாதா

மூ உலகு அளித்துக் காட்டி சேவலை உயர்த்திக் காட்டு
மூரி வில் மதற்குக் காட்டு – வயலூரா

வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ் மயில் நடத்திக் காட்டும் – இளையோனே

மா மலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த – பெருமாளே.

English

mEkalai nekizhththuk kAtti vArkuzhal viriththuk kAtti
vElvizhi purattik kAtti – yazhakAka

mEniyai minukkik kAtti nAdaka nadiththuk kAtti
veeduka Lazhaiththuk kAtti – matharAsan

Akama muraiththuk kAtti vAraNi thanaththaik kAtti
yArodu nakaiththuk kAtti – virakAlE

Athara manaththaik kAtti vEsaikaL mayakkaik kAtta
Asaiyai yavarkkuk kAtti – yazhivEnO

mOkana viruppaik kAtti njAnamu meduththuk kAtti
mUthamizh munikkuk kUttu – gurunAthA

mUvula kaLiththuk kAtti sEvalai yuyarththik kAttu
mUrivil mathaRkuk kAttu – vayalUrA

vAkaiyai mudiththuk kAtti kAnavar samarththaik kAtti
vAzhmayil nadaththik kAttu – miLaiyOnE

mAmalai vethuppik kAtti thAnavar thiRaththaik kAtti
vAnavar siraththaik kAththa – perumALE.

English Easy Version

mEkalai nekizhththuk kAtti vAr kuzhal viriththuk kAtti
vEl vizhi purattik kAtti – azhakAka

mEniyai minukkik kAtti nAdakam nadiththuk kAtti
veedukaL azhaiththuk kAtti – matha rAsan

Akamam uraiththuk kAtti vAr aNi thanaththaik kAtti
yArodu(m) nakaiththuk kAtti – virakAlE

Athara manaththaik kAtti vEsaikaL mayakkaik kAtta
Asaiyai avarkkuk kAtti – azhivEnO

mOkana viruppaik kAtti njAnamum eduththuk kAtti
mU thamizh munikkuk kUttu – gurunAthA

mU ulaku aLiththuk kAtti sEvalai uyarththik kAttu
mUri vil mathaRkuk kAttu – vayalUrA

vAkaiyai mudiththuk kAtti kAnavar samarththaik kAtti
vAzh mayil nadaththik kAttum – iLaiyOnE

mA malai vethuppik kAtti thAnavar thiRaththaik kAtti
vAnavar siraththaik kAththa – perumALE.