Thiruppugal 916 Valinmunai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன – தனதான
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
ராஜ நடையினு மம்பதி னும்பெரு
வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு – மரிதான
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ
வாயு நகைமுக வெண்பலு நண்புடன்
வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய – பனிநீருந்
தூளி படுநவ குங்கும முங்குளி
ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையு மங்கையு – மெவரேனுந்
தோயு மளறெனி தம்பமு முந்தியு
மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்
சூளை யரையெதிர் கண்டும ருண்டிட – லொழிவேனோ
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
நீலி கவுரிப யங்கரி சங்கரி
காரு ணியசிவை குண்டலி சண்டிகை – த்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
கான நடனமு கந்தவள் செந்திரு – அயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு – ளிளையோனே
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்
தீர வருள்தரு கந்தநி ரந்தர
மேலை வயலையு கந்துள நின்றருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன – தனதான
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம
ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு
வாதை வகை செய் கரும் க(ண்)ணும் எங்கணும் – அரிதான
வாரி அமுது பொசிந்து கசிந்த செ(வ்)
வாயு(ம்)நகை முக வெண் ப(ல்)லு(ம்) நண்புடன்
வாரும் இரும் எனும் இன் சொ(ல்)லும் மிஞ்சிய – பனி நீரும்
தூளி படு நவ குங்குமமும் குளிர்
ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் – எவரேனும்
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும்
மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில்
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் – ஒழிவேனோ
காளி திரிபுரை அந்தரி சுந்தரி
நீலி கவுரி பயங்கரி சங்கரி
காருணிய சிவை குண்டலி சண்டிகை – த்ரிபுராரி
காதல் மனைவி பரம்பரை அம்பிகை
ஆதி மலை மகள் மங்கலை பிங்கலை
கான நடனம் உகந்தவள் செம் திரு – அயன் மாது
வேளின் இரதி அருந்ததி இந்திர
தேவி முதல்வர் வணங்கும் த்ரி அம்பகி
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் – இளையோனே
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர்
தீர அருள் தரு கந்த நிரந்தர
மேலை வயலை உகந்து உ(ள்)ள(ம்) நின்று அருள் – பெருமாளே
English
vALin munaiyinu nanjinum venjama
rAja nadaiyinu mampathi numperu
vAthai vakaiseyka rungaNu mengaNu – marithAna
vAri yamuthupo sinthuka sinthase
vAyu nakaimuka veNpalu naNpudan
vAru mirumenu minsolu minjiya – panineerum
thULi padunava kunguma munguLi
rAra makilpuzhu kumpunai samprama
sOthi vaLarvana kongaiyu mangaiyu – mevarEnun
thOyu maLaReni thampamu munthiyu
mAyai kudikoLku dampaiyuL manpayil
cULai yaraiyethir kaNduma ruNdida – lozhivEnO
kALi thiripurai yanthari sunthari
neeli kavuripa yangari sangari
kAru Niyasivai kuNdali chaNdikai – thripurAri
kAthal manaivipa ramparai yampikai
Athi malaimakaL mangalai pingalai
kAna nadanamu kanthavaL senthiru – ayanmAthu
vELi nirathiya runthathi yinthira
thEvi muthalvarva Nanguthri yampaki
mEka vadivarpin vanthavaL thantharu – LiLaiyOnE
vElu mayiluni nainthavar thanthuyar
theera varuLtharu kanthani ranthara
mElai vayalaiyu kanthuLa ninRaruL – perumALE.
English Easy Version
vALin munaiyinum nanjinum vem sama
rAja nadaiyinum ampu athinum peru
vAthai vakai sey karum ka(N)Num engaNum – arithAna
vAri amuthu posinthu kasintha se(v)
vAyu(m)nakai muka veN pa(l)lu(m) naNpudan
vArum irum enum in so(l)lum minjiya – pani neerum
thULi padu nava kungumamum kuLir
Aram akil puzhukum punai samprama
sOthi vaLarvana kongaiyum am kaiyum – evarEnum
thOyum aLaRu ena nithampamum unthiyum
mAyai kudi koL kudampaiyuL man payil
cULaiyarai ethir kaNdu maruNdidal – ozhivEnO
kALi thiripurai anthari sunthari
neeli kavuri payangari sangari
kAruNiya sivai kuNdali chaNdikai – thripurAri
kAthal manaivi paramparai ampikai
Athi malai makaL mangalai pingalai
kAna nadanam ukanthavaL sem thiru – ayan mAthu
vELin irathi arunthathi inthira
thEvi muthalvar vaNangum thri ampaki
mEka vadivar pin vanthavaL thanthu aruL – iLaiyOnE
vElum mayilum ninainthavar tham thuyar
theera aruL tharu kantha niranthara
mElai vayalai ukanthu u(L)La(m) ninRu aruL – perumALE