திருப்புகழ் 917 விகட பரிமளம் (வயலூர்)

Thiruppugal 917 Vigadaparimalam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன – தந்ததான

விகட பரிமள ம்ருகமத இமசல
வகிர படிரமு மளவிய களபமு
மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்
உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்
கலவி விதவிய னரிவையர் மருள்வலை
யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
புரண புளகித இளமுலை யுரமிசை
தைக்கக்க ழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி – யன்புகூர

விபுத ரமுதென மதுவென அறுசுவை
அபரி மிதமென இலவிதழ் முறைமுறை
துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்
வரையு முறைசெய்து முனிவரு மனவலி
கரையு மரிசன பரிசன ப்ரியவுடை
தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்
விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ
மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி
கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு – வுந்திமூழ்கிப்

புகடு வெகுவித கரணமு மருவிய
வகையின் முகிலென இருளென வனமென
ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய
அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை
குமுத பதிகலை குறைகலை நிறைகலை
சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு
பொழுதும் விடலரி தெனுமநு பவமவை
முழுது மொழிவற மருவிய கலவியி
தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் – நைந்துசோரப்

புணரு மிதுசிறு சுகமென இகபரம்
உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்
அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்
உணர்வு முணர்வுற வழுவற வொருஜக
வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநுபவ வடிவினை யளவறு
அகில வெளியையு மொளியையு மறிசிவ
தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை – யென்றுசேர்வேன்

திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி – என்றுபேரி

திமிலை கரடிகை பதலைச லரிதவில்
தமர முரசுகள் குடமுழ வொடுதுடி
சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
குசல பசுபதி குருவென விருதுகள்
ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
மகர சலநிதி மொகுமொகு மொகுவென
எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற – நின்றசேடன்

மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
அகில புவனமும் ஹரஹர ஹரவென
நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி
குருதி யருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை
எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி – யும்பர்வாழ

மடிய அவுணர்கள் குரகத கஜரத
கடக முடைபட வெடிபட எழுகிரி
அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை
அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக
இயலு மிசைகளு நடனமும் வகைவகை
சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன – தந்ததான

விகட பரிமள ம்ருகமத இமசல(ம்)
வகிர படிரமும் அளவிய களபமும்
மட்டித்து இதழ்த் தொடை முடித்துத் தெருத் தலையில்
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர்
கலவி வித(ம்) வியன் அரிவையர் மருள் வலை
இட்டுத் துவக்கி இடர் பட்டுத் தியக்கி அவர்
விரவு நவ மணி முக பட(ம்) எதிர் பொரு
புரண(ம்) புளகித இள முலை உர(ம்) மிசை
தைக்கக் கழுத்தொடு கை ஒக்கப் பிணித்து இறுகி – அன்பு கூர

விபுதர் அமுது என மது என அறு சுவை
அபரிமிதம் என இலவ இதழ் முறை முறை
துய்த்துக் களித்து நகம் வைத்துப் ப(ல்)லில் குறியின்
வரையும் முறை செய்து முனிவரு(ம்) மன வலி
கரையும் அரிசன(ம்) பரிசன(ம்) ப்ரிய உடை
தொட்டுக் குலைத்து நுதல் பொட்டுப் படுத்தி மதர்
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ
மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி
கற்றிட்ட புட் குரல் மிடற்றில் பயிற்றி மடு – உந்தி மூழ்கிப்

புகடு வெகு வித கரணமு(ம்) மருவிய
வகையின் முகில் என இருள் என வனம் என
ஒப்பித்த நெய்த்த பல புட்பக் குழல் சரிய
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை
குமுத பதி கலை குறை கலை நிறை கலை
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி
ஒரு பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை
முழுதும் ஒழி அற மருவிய கலவி
இதத்து ப்ரியப்பட நடித்துத் துவட்சியினில் – நைந்து சோர

புணரும் இது சிறு சுகம் என இகபரம்
உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம்
அற்றுக் கருத்து ஒருமை உற்றுப் புலத் தலையில்
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய்
உணர்வும் உணர்வு உற வழு அற ஒரு ஜக
வித்தைக் குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு
அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ
தத்வ ப்ரசித்தி தனை முத்திச் சிவக் கடலை – என்று சேர்வேன்

திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி – என்று பேரி

திமிலை கரடிகை பதலை ச(ல்)லரி தவில்
தமர முரசுகள் குடமுழவொடு துடி
சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி
குசல பசுபதி குரு என விருதுகள்
ஒத்தத் திரள் பலவும் முற்றிக் கலிக்க எழு
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என
மகர சல நிதி மொகுமொகுமொகு என
எட்டுத் திசைக் களிறு மட்டற்று அறப் பிளிற – நின்ற சேடன்

மகுட சிரதலம் நெறுநெறுநெறு என
அகில புவனமும் ஹர ஹர ஹர என
நக்ஷத்ரம் உக்கி விழ வக்கிட்ட துட்ட குண
நிருதர் தலை அற வடிவெனும் மலை சொரி
குருதி அருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப் பழுத்த உடல் செக்கச் சிவத்து விட
வயிறு சரி குடல் நரி தி(ன்)ன நிணம் அவை
எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலைப் பரவி – உம்பர் வாழ

மடிய அவுணர்கள் குரகத கஜ ரத
கடகம் உடைபட வெடிபட எழு கிரி
அற்றுப் பறக்க வெகு திக்குப் படி(ந்)து நவ
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற
அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை
அக் குக்குடக் கொடி செருக்கப் பெருக்கமுடன்
வயலி நகர் உறை சரவணபவ குக
இயலும் இசைகளு(ம்) நடனமும் வகை வகை
சத்யப் படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் – தம்பிரானே

English

vikata parimaLa mrukamatha imasala
vakira padiramu maLaviya kaLapamu
mattiththi thazhththodaimu diththuththe ruththalaiyil
ulavi yiLainjarkaL poruLuda nuyirkavar
kalavi vithaviya narivaiyar maruLvalai
yittuththu vakkiyidar pattuth thiyakkiyavar
viravu navamaNi mukapada ethirporu
puraNa puLakitha iLamulai yuramisai
thaikkakka zhuththodukai yokkappi NiththiRuki – yanpukUra

viputha ramuthena mathuvena aRusuvai
apari mithamena ilavithazh muRaimuRai
thuyththukka Liththunakam vaiththuppa liRkuRiyin
varaiyu muRaiseythu munivaru manavali
karaiyu marisana parisana priyavudai
thottukku laiththunuthal pottuppa duththimathar
vizhikaL kuzhaipora mathimukam veyarvezha
mozhikaL pathaRida rathipathi kalaivazhi
katRitta putkuralmi datRiRpa yitRimadu – vunthimUzhkip

pukadu vekuvitha karaNamu maruviya
vakaiyin mukilena iruLena vanamena
oppiththa neyththapala putpakku zhaRchariya
amutha nilaimala radimuthal mudikadai
kumutha pathikalai kuRaikalai niRaikalai
siththaththa zhuththiyanu varkkaththu rukkiyoru
pozhuthum vidalari thenumanu pavamavai
muzhuthu mozhivaRa maruviya kalaviyi
thaththupri yappadana diththuththu vatchiyinil – nainthusOrap

puNaru mithusiRu sukamena ikaparam
uNaru maRivili praimaitharu thirimalam
atRukka ruththorumai yutRuppu laththalaiyil
maRuku poRikazhal niRuviye siRithumey
uNarvu muNarvuRa vazhuvaRa vorujaka
viththaikku Nathrayamum nirththaththu vaiththumaRai
pukalu manupava vadivinai yaLavaRu
akila veLiyaiyu moLiyaiyu maRisiva
thathvapra siththithanai muththicchi vakkadalai – yenRusErvEn

thikuda thikukuda thikukuda thikukuda
thakuda thakukuda thakukuda thakukuda
thikkuththi kuththikuda thakkuththa kuththakuda
dumida dumimida dumimida dumimida
damada damamada damamada damamada
duttuttu duttumida dattatta dattamada
thikurthi thikuthiku thikukurthi thikukurthi
thakurthi thakuthaku thakukurthi thakukurthi
thikkuththi kuththikurthi thakkuththa kuththakurthi – enRupEri

thimilai karadikai pathalaisa larithavil
thamara murasukaL kudamuzha voduthudi
saththakka NappaRaikaL meththaththo niththathira
asurar kulaari amararkaL jayapathi
kusala pasupathi kuruvena viruthukaL
oththaththi ratpalavu mutRikka likkaezhu
sikara kodumudi kidukidu kiduvena
makara salanithi mokumoku mokuvena
ettuththi saikkaLiRu mattatRa RappiLiRa – ninRasEdan

makuda sirathalam neRuneRu neRuvena
akila puvanamum harahara haravena
nakshathra mukkivizha vakkitta thuttakuNa
niruthar thalaiyaRa vadivenu malaisori
kuruthi yaruviyin muzhukiya kazhukukaL
pakkappa zhuththavudal sekkacchi vaththuvida
vayiRu sarikudal narithina niNamavai
eyiRu alakaikaL nedukiya kuRaLikaL
pakshiththu nirththamida rakshiththa laipparavi – yumparvAzha

madiya avuNarkaL kurakatha kajaratha
kadaka mudaipada vedipada ezhukiri
atRuppa Rakkaveku thikkuppa diththunava
nathikaL kuzhaithara ipapathi makizhvuRa
amarsey thayilkaiyil veyilezha mayilmisai
akkukku dakkodise rukkappe rukkamudan
vayali nakaruRai saravaNa bavaguha
iyalu misaikaLu nadanamum vakaivakai
sathyappa dikkinitha kasthyarkku NarththiyaruL – thambirAnE.

English Easy Version

vikata parimaLa mrukamatha imasala(m)
vakira padiramum aLaviya kaLapamum
mattiththu ithazhth thodai mudiththuth theruth thalaiyil
ulavi iLainjarkaL poruL udan uyir kavar
kalavi vitha(m) viyan arivaiyar maruL valai
ittuth thuvakki idar pattuth thiyakki avar
viravu nava maNi muka pada(m) ethir poru
puraNa(m) puLakitha iLa mulai ura(m) misai
thaikkak kazhuththodu kai okkap piNiththu iRuki – anpu kUra

viputhar amuthu ena mathu ena aRu suvai
aparimitham ena ilava ithazh muRai muRai
thuyththuk kaLiththu nakam vaiththup pa(l)lil kuRiyin
varaiyum muRai seythu munivaru(m) mana vali
karaiyum arisana(m) parisana(m) priya udai
thottuk kulaiththu nuthal pottup paduththi mathar
vizhikaL kuzhai pora mathi mukam veyarvu ezha
mozhikaL pathaRida rathi pathi kalai vazhi
katRitta put kural midatRil payitRi madu – unthi mUzhkip

pukadu veku vitha karaNamu(m) maruviya
Vakaiyin mukil ena iruL ena vanam ena
oppiththa neyththa pala putpak kuzhal sariya
amutha nilai malar adi muthal mudi kadai
kumutha pathi kalai kuRai kalai niRai kalai
siththaththu azhuththi anuvarkkaththu urukki oru
pozhuthum vidal arithu enum anupavam avai
muzhuthum ozhi aRa maruviya kalavi
ithaththu priyappada nadiththuth thuvatchiyinil – nainthu sOra

puNarum ithu siRu sukam ena ikaparam
uNarum aRivili pramai tharu thiri malam
atRuk karuththu orumai utRup pulath thalaiyil
maRuku poRi kazhal niRuviye siRithu mey
uNarvum uNarvu uRa vazhu aRa oru jaka
viththaik kuNa thrayamum nirththaththu vaiththu maRai
pukalum anupava vadivinai aLavu aRu
akila veLiyaiyum oLiyaiyum aRi siva
thathva prasiththi thanai muththic chivak kadalai – enRu sErvEn

thikuda thikukuda thikukuda thikukuda
thakuda thakukuda thakukuda thakukuda
thikkuththi kuththikuda thakkuththa kuththakuda
dumida dumimida dumimida dumimida
damada damamada damamada damamada
duttuttu duttumida dattatta dattamada
thikurthi thikuthiku thikukurthi thikukurthi
thakurthi thakuthaku thakukurthi thakukurthi
thikkuththi kuththikurthi thakkuththa kuththakurthi – enDrU


pEri thimilai karadikai pathalai sa(l)lari thavil
thamara murasukaL kudamuzhavodu thudi
saththak kaNap paRaikaL meththath thoniththu athira
asurar kula ari amararkaL jaya pathi
kusala pasupathi kuru ena viruthukaL
oththath thiraL palavum mutRik kalikka ezhu
sikara kodu mudi kidukidukidu ena
makara sala nithi mokumokumoku ena
ettuth thisaik kaLiRu mattatRu aRap piLiRa – ninRa sEdan

makuda sirathalam neRuneRuneRu ena
akila puvanamum hara hara hara ena
nakshathram ukki vizha vakkitta thutta kuNa
niruthar thalai aRa vadivenum malai sori
kuruthi aruviyin muzhukiya kazhukukaL
pakkap pazhuththa udal chekkac chivaththu vida
vayiRu sari kudal nari thi(n)na niNam avai
eyiRu alakaikaL nedukiya kuRaLikaL
pakshiththu nirththamida rakshiththalaip paravi – umpar vAzha

madiya avuNarkaL kurakatha kaja ratha
kadakam udaipada vedipada ezhu kiri
atRup paRakka veku thikkup padi(n)thu
navanathikaL kuzhai thara ipa pathi makizhvuRa
amar seythu ayil kaiyil veyil ezha mayil misai
ak kukkudak kodi serukkap perukkamudan
vayali nakar uRai saravaNabava guha
iyalum isaikaLu(m) nadanamum vakai vakai
sathyap padikku inithu akasthiyarkku uNarththi aruL – thambirAnE.