திருப்புகழ் 918 கார் அணியும் குழல் (திருத்தவத்துறை)

Thiruppugal 918 Karaniyumkuzhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன – தனதான

காரணி யுங்குழ லைக்கு வித்திடு
கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
காணவ ருந்திமு டித்தி டக்கடு – விரகாலே

காதள வுங்கய லைப்பு ரட்டிம
னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
காமுக ரன்புகு வித்த கைப்பொரு – ளுறவாகிப்

பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
சீதள குங்கும மொத்த சித்திர
பூஷித கொங்கையி லுற்று முத்தணி – பிறையான

போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட – அருள்வாயே

வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
வேகமு டன்பறை கொட்டி டக்கழு – கினமாட

வீசிய பம்பர மொப்பெ னக்களி
வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
வேதப ரம்பரை யுட்க ளித்திட – வரும்வீரா

சீரணி யுந்திரை தத்து முத்தெறி
காவிரி யின்கரை மொத்து மெத்திய
சீர்புனை கின்றதி ருத்த வத்துறை – வரும்வாழ்வே

சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன – தனதான

கார் அணியும் குழலைக் குவித்து இடு
கோகனகம் கொடு மெத்தெனப் பிறர்
காண வருந்தி முடித்திட கடு – விரகாலே

காது அளவும் கயலைப் புரட்டி
மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் – உறவாகி

பூரண கும்பம் எனப் புடைத்து எழு
சீதள குங்குமம் ஒத்த சித்திர
பூஷித கொங்கையில் உற்று முத்து அணி – பிறையான

போருவை ஒன்று நெகிழ்த்து உருக்கி மெய்
யாரையும் நெஞ்சை விலைப் படுத்திடு
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட – அருள்வாயே

வீர புயம் கிரி உக்ர விக்ரம
பூத கணம் பல நிர்த்தம் இட்டிட
வேகமுடன் பறை கொட்டிடக் கழுகு – இனம் ஆட

வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி
வீச நடம் செய் விடை தனித் துசர்
வேத பரம்பரை உள் களித்திட – வரும் வீரா

சீர் அணியும் திரை தத்து(ம்) முத்து எறி
காவிரியின் கரை மொத்து மெத்திய
சீர் புனைகின்ற திருத்தவத் துறை – வரும் வாழ்வே

சீறி எதிர்த்த அரக்கரைக் கெட
மோதி அடர்ந்து அருள் பட்ச(ம்) முற்றிய
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் – பெருமாளே.

English

kAraNi yumkuzha laikku viththidu
kOkana kamkodu meththe nappiRar
kANava runthimu diththi dakkadu – virakAlE

kAthaLa vumkaya laippu rattima
nAthikaL vanjami kuththi dappadi
kAmuka ranpuku viththa kaipporu – LuRavAkip

pUraNa kumpame nappu daiththezhu
seethaLa kumkuma moththa siththira
pUshitha kongaiyi lutRu muththaNi – piRaiyAna

pOruvai yonRune kizhththu rukkimey
yAraiyum nenjaivi laippa duththidu
pUvaiyar thangaLma yakkai vittida – aruLvAyE

veerapu yamkiri yukra vikrama
pUthaka Nampala nirththa mittida
vEkamu danpaRai kotti dakkazhu – kinamAda

veesiya pampara moppe nakkaLi
veesana damcheyvi daiththa niththusar
vEthapa ramparai yutka Liththida – varumveerA

seeraNi yunthirai thaththu muththeRi
kAviri yinkarai moththu meththiya
seerpunai kinRathi ruththa vaththuRai – varumvAzhvE

seeRiye thirnthava rakka raikkeda
mOthiya darntharuL patcha mutRiya
thEvarkaL thamchiRai vetti vittaruL – perumALE.

English Easy Version

kAr aNiyum kuzhalaik kuviththu idu
kOkanakam kodu meththenap piRar
kANa varunthi mudiththida kadu – virakAlE

kAthu aLavum kayalaip puratti
mana AthikaL vanjam mikuththu idappadi
kAmukar anpu kuviththa kaipporuL – uRavAki

pUraNa kumpam enap pudaiththu ezhu
seethaLa kumkumam oththa siththira
pUshitha kongaiyil utRu muththu aNi – piRaiyAna

pOruvai onRu nekizhththu urukki mey
yAraiyum nenjai vilaip paduththidu
pUvaiyar thangaL mayakkai vittida – aruLvAyE

veera puyam kiri ukra vikrama
pUtha kaNam pala nirththam ittida
vEkamudan paRai kottidak kazhuku – inam Ada

veesiya pamparam oppu enak kaLi
veesa nadam sey vidai thanith thusar
vEtha paramparai uL kaLiththida – varum veerA

seer aNiyum thirai thaththu(m) muththu eRi
kAviriyin karai moththu meththiya
seer punaikinRa thiruththavath thuRai – varum vAzhvE

seeRi ethirththa arakkaraik keda
mOthi adarnthu aruL patcha(m) mutRiya
thEvarkaL tham siRai vetti vittu aruL – perumALE.