Thiruppugal 919 Niraiththaniththila
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன – தனதான
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி
நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி – முகமானார்
நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை
யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு – நெறியாலே
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
கழற்று தித்திடு வாழ்வது தான்மன – துறமேவிக்
கதித்த பத்தமை சாலடி யார்சபை
மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
கதிக்க டுத்துயர் வாகவு மேயரு – ளுரையாதோ
வரைத்த நுக்கரர் மாதவ மேவின
ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய – வடிவேலா
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
ருரைத்து ளத்திரு வாசக மானது
மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய – மணிமாடத்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி
பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை – குவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்
வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
திருத்த வத்துறை மாநகர் தானுறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன – தனதான
நிரைத்த நித்தில(ம்) நீள் மணி மாலைகள்
பொறுத்த வெற்பு இணை மார் முலை மேல் அணி
நெறித்த நெய்க் குழல் வாள் விழி மா மதி – முக மானார்
நெளித்த சிற்றிடை மேல் கலை ஆடையை
உடுத்தி அத்தம் உளோர் தமையே மயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேர் உறு – நெறியாலே
கரைத்து இதக் குயில் போல் மொழி மாதர்கள்
வலைக்கு உ(ள்)ளில் சுழலா வகையே
உன கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது – உற மேவி
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை
மிகுத்து இழிக் குண பாதகனேன் உயர்
கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் – உரையாதோ
வரைத் தநுக் கரர் மா தவம் மேவினர்
அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு
மணிச் செவிக்குள் மெய்ஞ் ஞானம் அது – ஓதிய வடிவேலா
மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர்
உரைத்துள திருவாசகம் ஆனது மனத்துள்
எத்து அழகார் புகழ் வீசிய – மணி மாட
திரைக் கடல் பொரு காவிரி மா நதி
பெருக்கு எடுத்துமெ பாய் வள நீர் பொலி
செழித்த நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை – குவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம்
வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி
திருத்தவத்துறை மா நகர் தான் உறை – பெருமாளே
English
niraiththa niththila neeLmaNi mAlaikaL
poruththa veRpiNai mArmulai mElaNi
neRiththa neykkuzhal vALvizhi mAmathi – mukamAnAr
neLiththa sitRidai mElkalai yAdaiyai
yuduththi yaththamu LOrthamai yEmayal
nirappi niththamum veethiyil nEruRu – neRiyAlE
karaiththi thakkuyil pOlmozhi mAtharkaL
valaikku LiRchuzha lAvakai yEyuna
kazhatRu thiththidu vAzhvathu thAnmana – thuRamEvik
kathiththa paththamai sAladi yArsapai
mikuththi zhikkuNa pAthaka nEnuyar
kathikka duththuyar vAkavu mEyaru – LuraiyAthO
varaiththa nukkarar mAdhava mEvina
rakaththi daththinil vAzhsiva nArthiru
maNicche vikkuLmeynj njAnama thOthiya – vadivElA
mathiththa muththami zhAyvinar mElava
ruraiththu Laththiru vAsaka mAnathu
manaththu Leththazha kArpukazh veesiya – maNimAdath
thiraikka daRporu kAviri mAnathi
perukke duththume pAyvaLa neerpoli
sezhiththa neRchenel vArika LEkuvai – kuvaiyAkac
cherukku seyppathi vAzhmuru kAaRam
vaLarththa nithyakal yANikru pAkari
thiruththa vaththuRai mAnakar thAnuRai – perumALE.
English Easy Version
niraiththa niththala(m) neeL maNi mAlaikaL
poRuththa veRpu iNai mAr mulai mEl aNi
neRiththa neyk kuzhal vAL vizhi mA mathi – muka mAnAr
neLiththa sitRidai mEl kalai Adaiyai
uduththi aththam uLOr thamaiyE mayal
Nirappi niththamum veethiyil nEr uRu – neRiyAlE
karaiththu ithak kuyil pOl mozhi mAtharkaL
valaikku u(L) Lil suzhalA vakaiyE una
kazhal thuthiththidu vAzhvu athu thAn manathu – uRa mEvi
kathiththa paththi amai sAl adiyAr sapai
mikuththu izhik kuNa pAthakanEn uyar
kathikku aduththu uyarvAkavumE aruL – uraiyAthO
varaith thanuk karar mA thavam mEvinar
akaththu idaththinil vAzh sivanAr thiru
maNis sevikkuL meynj njAnam athu Othiya – vadivElA
mathiththa muththamizh Ayvinar mElavar
uraiththuLa thiruvAsakam Anathu
manaththuL eththu azhakAr pukazh veesiya – maNi mAda
thiraik kadal poru kAviri mA nathi
perukku eduththume pAy vaLa neer poli
Sezhiththa nel se(n) nel vArikaLE kuvai – kuvaiyAkac
cherukku seyppathi vAzh murukA aRam
vaLarththa nithya kalyANi krupAkari
thiruththavaththuRai mA nakar thAn uRai – perumALE