திருப்புகழ் 920 காலன் வேல் கணை (பூவாளூர்)

Thiruppugal 920 Kalanvelkanai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன – தனதான

காலன் வேற்கணை யீர்வா ளாலமு
நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்
காம சாத்திர வாய்ப்பா டேணிக – ளெவரேனுங்

காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்
போக பாத்திர மாமூ தேவிகள்
காசு கேட்டிடு மாயா ரூபிக – ளதிமோக

மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
ஆனை போற்பொர நேரே போர்முலை
மார்பு காட்டிகள் நானா பேதக – மெனமாயா

மாப ராக்கிக ளோடே சீரிய
போது போக்குத லாமோ நீயினி
வாவெ னாப்பரி வாலே யாள்வது – மொருநாளே

பால றாத்திரு வாயா லோதிய
ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
பாடல் தோற்றிரு நாலா மாயிர – சமண்மூடர்

பாரின் மேற்கழு மீதே யேறிட
நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
பாது காத்தரு ளாலே கூனிமி – ரிறையோனும்

ஞால மேத்திய தோர்மா தேவியும்
ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
ஞான பாக்கிய பாலா வேலவ – மயில்வீரா

ஞான தீக்ஷித சேயே காவிரி
யாறு தேக்கிய கால்வாய் மாமழ
நாடு போற்றிய பூவா ளுருறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன
தான தாத்தன தானா தானன – தனதான

காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமு(ம்)
நேர் க(ண்)ணால் கொலை சூழ் மா பாவிகள்
காம சாத்திர வாய் பாடா ஏணிகள் – எவரேனும்

காதல் ஆர்க்கும் வினா வாய் கூறிகள்
போக பாத்திர மா மூதேவிகள்
காசு கேட்டிடு(ம்) மாயா ரூபிகள் – அதி மோக

மாலை மூட்டிகள் வானூடே நிமிர்
ஆனை போல் பொர நேரே போர் முலை
மார்பு காட்டிகள் நானா பேதகம் – என மாயா

மா பராக்கிகளோடே சீரிய
போது போக்குதல் ஆமோ நீ இனி
வா எனா பரிவாலே ஆள்வதும் – ஒரு நாளே

பால் அறாத் திரு வாயால் ஓதிய
ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய்
பாடல் தோற்ற இரு நாலாம் ஆயிரம் – சமண் மூடர்

பாரின் மேல் கழு மீதே ஏறிட
நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட
பாதுகாத்து அருளாலே கூன் நிமிர் – இறையோனும்

ஞாலம் ஏத்தியதோர் மா தேவியும்
ஆலவாய்ப் பதி வாழ்வாமாறு
எ(ண்)ணும் ஞான பாக்கிய பாலா வேலவ – மயில் வீரா

ஞான தீக்ஷித சேயே காவிரி
ஆறு தேக்கிய கால்வாய் மா மழ
நாடு போற்றிய பூவாளூர் உறை – பெருமாளே.

English

kAlan vERkaNai yeervA LAlamu
nErka NARkolai sUzhmA pAvikaL
kAma sAththira vAyppA dENika – LevarEnung

kAtha lArkkumvi nAvAy kURikaL
pOka pAththira mAmU thEvikaL
kAsu kEttidu mAyA rUpika – LathimOka

mAlai mUttikaL vAnU dEnimir
Anai pORpora nErE pOrmulai
mArpu kAttikaL nAnA pEthaka – menamAyA

mApa rAkkika LOdE seeriya
pOthu pOkkutha lAmO neeyini
vAve nAppari vAlE yALvathu – morunALE

pAla RAththiru vAyA lOthiya
Edu neerkkethir pOyE vAthusey
pAdal thOtRiru nAlA mAyira – samaNmUdar

pArin mERkazhu meethE yERida
neeRi dAththamizh nAdee dERida
pAthu kAththaru LAlE kUnimi – riRaiyOnum

njAla mEththiya thOrmA thEviyum
Ala vAyppathi vAzhvA mAReNu
njAna pAkkiya pAlA vElava – mayilveerA

njAna theekshitha sEyE kAviri
yARu thEkkiya kAlvAy mAmazha
nAdu pOtRiya pUvA LuruRai – perumALE.

English Easy Version

kAlan vEl kaNai eer vAL Alamu(m)
nEr ka(N)NAl kolai sUzh mA pAvikaL
kAma sAththira vAy pAdA ENikaL – evarEnum

kAthal Arkkum vinA vAy kURikaL
pOka pAththira mA mUthEvikaL
kAsu kEttidu(m) mAyA rUpikaL – athi mOka

mAlai mUttikaL vAnUdE nimir
Anai pOl pora nErE pOr mulai
mArpu kAttikaL nAnA pEthakam ena – mAyA

mA parAkkikaLOdE seeriya
pOthu pOkkuthal AmO nee ini
vA enA parivAlE ALvathum – oru nALE

pAl aRAth thiru vAyAl Othiya
Edu neerkku ethir pOyE vAthu sey
pAdal thOtRa iru nAlAm Ayiram – samaN mUdar

pArin mEl kazhu meethE ERida
neeRu idAth thamizh nAdu eedERida
pAthukAththu aruLAlE kUn nimir – iRaiyOnum

njAlam EththiyathOr mA thEviyum
AlavAyp pathi vAzhvAmARu e(N)Num
njAna pAkkiya pAlA vElava – mayil veerA

njAna theekshitha sEyE kAviri
ARu thEkkiya kAlvAy mA mazha
nAdu pOtRiya pUvALUr uRai – perumALE