திருப்புகழ் 922 புணரியும் (தென்கடம்பந்துறை)

Thiruppugal 922 Punariyum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் – தனதான

புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்
புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் – பெறிவேலும்

பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்
றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்
புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் – குழைமோதிக்

குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்
படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்
கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் – கணினார்பால்

குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்
குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் – றமைவேனோ


துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்
புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்
தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் – திருதோளுந்

தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்
பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்
துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் – பதிவாழ்வாய்

கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்
குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்
கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் – குருநாதா

கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்
குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்
கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் – தனதான

புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும்
கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும்
புது நில வருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு – எறி வேலும்

பொரு என இகன்று அகன்ற அங்கும் இங்கும் சுழன்று
இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம்
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித – குழை மோதிக்

குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்
படி அமர் புரிந்து அரும் சங்கடம் சந்ததம்
கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் – கடைக்கண்ணினர் பால்

குலவு பல செம் தனம் தந்து தந்து இன்புறும்
த்ரி வித கரணங்களும் கந்த நின் செம் பதம்
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று – அமைவேனோ

துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்பு உறும்
புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம்
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்று(ம்) – பத்திரு தோளும்

தொலைவு இல் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும்
பழனி மலையும் பரங் குன்றமும் செந்திலும் துதி செயு(ம்)
மெய் அன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப்பதி – வாழ்வாய்


கண பண புயங்கமும் கங்கையும் திங்களும்
குரவும் அறுகும் குறும் தும்பையும் கொன்றையும்
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடைக் – குரு நாதா

கன குடகில் நின்ற குன்றம் தரும் சங்கரன்
குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும்
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை – பெருமாளே

English

puNariyuma nangkanam pumchurum pungarum
kayalinodu keNdaiyum chaNdanum kanjamum
puthunilava runthiyun thunjunan jumporup – peRivElum

poruvenai kanRakan Rangumin gumchuzhan
Ridaikadaisi vanthuvan jampothin thingitham
puviyiLainjar munpayin Ramponin kampithak – kuzhaimOthik

kuNalaiyodu minthriyam chanjalam kaNdidum
padiyamarpu rintharum changadam chanthatham
kodumaiseythu sangodum singithan gumkadaik – kaNinArpAl


kulavupala senthanan thanthuthan thinpuRun
thrivithakara NangaLung kanthanin sempathang
kuRukumvakai yanthiyum chanthiyun thonthamat – RamaivEnO

thuNarvirika dampamen thongalum pampuRum
puzukumasa lampasum chanthanang kunguman
thokukaLapa munthuthain thenRunan konRupath – thiruthOLun

tholaivilsaNmu kangaLum thanthraman thrangaLum
pazhanimalai yumparang kundRamum senthilun
thuthiseyume yanpartham sinthaiyum senRuseyp – pathivAzvAy


kaNapaNapu yangamum kangaiyun thingaLung
kuravumaRu kunguRun thumpaiyung konRaiyung
kamazhsadila sampuvum kumpidum paNpudaik – kurunAthA


kanakudakil ninRakun Rantharum sankaran
kuRumunika maNdalang koNdumun kaNdidung
kathiseynathi vanthuRun thenkadam panthuRaip – perumALE.

English Easy Version

puNariyum anangkan ampum surumpum karum
kayalinodu keNdaiyum chaNdanum kanjamum
puthu nila varunthiyum thunju nanjum poruppu – eRi vElum

poru ena ikanRu akanRa angum ingum chuzanRu
idai kadai sivanthu vanjam pothinthu ingitham
puvi iLainjar mun payinRu am ponin kampitha – kuzai mOthik

kuNalaiyodum inthriyam sanjalam kaNdidum
padi amar purinthu arum sangadam santhatham
kodumaisey thusam kodum singi thangum kadai – kkaNNinar pAl

kulavu pala sem thanam thanthu thanthu inpuRum
thri vitha karaNangaLum kantha nin sem patham
kuRukum vakai anthiyum santhiyum thontham atRu – amaivEnO

thuNar viri kadampa men thongalum pampu uRum
puzhukum asalam pasum santhanam kungumam
thoku kaLapamum thuthainthu enRu nanku onRu(m) – paththiru thOLum

tholaivu il saNmukangaLum thanthira manthrangaLum
pazhani malaiyum parang kundRamum senthilum
thuthi seyu(m) meyanpartham sinthaiyum senRu seyppathi – vAzhvAy

kaNa paNa puyangamum kangaiyum thingaLum
kuravum aRukum kuRum thumpaiyum konRaiyum
kamazh sadila sampuvum kumpidum paNpudaik – kuru nAthA

kana kudakil ninRa kundRam tharum sangaran
kuRu muni kamaNdalam koNdu mun kaNdidum
kathi sey nathi vanthu uRum then kadampanthuRai – perumALE