Thiruppugal 924 Ilanirkkuvattu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத் தனத்ததன தனனத் தனத்ததன
தனனத் தனத்ததன – தனதான
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
யிரதக் குடத்தையெணு – மரபோடே
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய
இதழ்சர்க் கரைப்பழமொ – டுறழூறல்
முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல
முதிரத் துவற்பஅல்குல் – மிசைமூழ்கி
மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி
முழுகிச் சுகிக்கும்வினை – யறஆளாய்
நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ
னயனத் திலுற்றுநட – மிடும்வேலா
நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ
னறைபுட் பநற்றுளவன் – மருகோனே
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக
கமலப் புயத்துவளி – மணவாளா
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்
கருவைப் பதிக்குளுறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனத் தனத்ததன தனனத் தனத்ததன
தனனத் தனத்ததன – தனதான
இள நீர்க் குவட்டு முலை அமுதத் தடத்தை கனி
இரதக் குடத்தை எ(ண்)ணு(ம்) – மரபோடே
இரு கைக்கு அடைத்து இடை துவளக் குழல் சரிய
இதழ் சர்க்கரைப் பழ – மொடு உறழ
உ(ஊ)றல் முளரிப் பு ஒத்த முக(ம்) முகம் வைத்து அருத்தி நலம்
முதிரத் து அற்ப அல்குல் – மிசை மூழ்கி
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி
முழுகிச் சுகிக்கும் வினை – அற ஆளாய்
நளினப் பதக் கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என்
நயனத்தில் உற்று நடமிடும் – வேலா
நரனுக்கு அமைத்த கொடி இரதச் சுதக் களவன்
நறை புட்ப நல் துளவன் – மருகோனே
களபத் தனத்தி சுக சரசக் குறத்தி முகம் கமல
அ(ம்)ப் புயத்து வ(ள்)ளி – மணவாளா
கடலைக் குவட்டு அவுணை இரணப் படுத்தி உயர்
கருவைப் பதிக்குள் உறை – பெருமாளே
English
iLanirk kuvattumulai yamuthath thadaththaikani
yirathak kudaththaiyeNu – marapOdE
irukaik kadaiththuidai thuvaLak kuzhaRchariya
ithazhchark karaippazhamo – duRazhURal
muLarip puvoththamuka mukamvaith tharuththinala
muthirath thuvaRpaalkul – misaimUzhki
mozhithath thaiyoppakadai vizhikat chivappamaLi
muzhukic chukikkumvinai – yaRaALAy
naLinap pathakkazhalu moLirsec chaipoRpuyame
nayanath thilutRunada – midumvElA
naranuk kamaiththakodi yirathac chuthakkaLava
naRaiput panatRuLavan – marukOnE
kaLapath thanaththisuka sarasak kuRaththimuka
kamalap puyaththuvaLi – maNavALA
kadalaik kuvattavuNai yiraNap paduththiyuyar
karuvaip pathikkuLuRai – perumALE.
English Easy Version
iLa neerk kuvattu mulai amuthath thadaththai kani
irathak kudaththai e(N)Nu(m) – marapOdE
iru kaikku adaiththu idai thuvaLak kuzhal chariya
ithazh charkkaraip pazhamodu – uRazha u(U)Ral
muLarip pu oththa muka(m) mukam vaiththu aruththi nalam
muthirath thu aRpa alkul – misai mUzhki
mozhi thaththai oppa kadai vizhikaL sivappa amaLi
muzhukic chukikkum vinai – aRa ALAy
naLinap pathak kazhalum oLir secchai pon puyam en
nayanaththil utRu nadamidum – vElA
naranukku amaiththa kodi irathac chuthak kaLavan
naRai putpa nal thuLavan – marukOnE
kaLapath thanaththi suka sarasak kuRaththi mukam
kamala a(m)p puyaththu va(L)Li – maNavALA
kadalaik kuvattu avuNai iraNap paduththi uyar
karuvaip pathikkuL uRai – perumALE.