திருப்புகழ் 927 முட்ட மருட்டி (கருவூர்)

Thiruppugal 927 Muttamarutti

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
தத்தன தத்த தனதனத் – தனதான

முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
மொட்பைவி ளைத்து முறையளித் – திடுமாதர்

முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட
மொச்சிய பச்சை யகில்மணத் – தனபாரம்

கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய
கைத்தல மெய்த்து வசனமற் – றுயிர்சோருங்

கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
கற்பனை பக்ஷ முடனளித் – தருளாதோ

வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக
விக்ரம வுக்ர வெகுவிதப் – படைவீரா

வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்
வித்தக சித்த வயலியிற் – குமரேசா

கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
கித்திந டக்கு மலகைசுற் – றியவேலா


கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
கெர்ப்பபு ரத்தி லறுமுகப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
தத்தன தத்த தனதனத் – தனதான

முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக் கண் இயல் என
மொட்பை விளைத்து முறை அளித்திடு – மாதர்

முத்தம் இரத்ந மரகதம் வைத்த விசித்ர முகபட(ம்)
மொச்சிய பச்சை அகில் மணத் – தன பாரம்

கட்டி அணைத்து நகநுதி பட்ட கழுத்தில் இறுகிய
கைத் தலம் எய்த்து வசனம் அற்று – உயிர் சோரும்

கட்ட(ம்) முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித
கற்பனை பக்ஷமுடன் அளித்து – அருளாதோ

வெட்டிய கட்கம் முனை கொ(ண்)டு அட்ட குணத்து ரணமுக
விக்ரம உக்ர வெகு விதப் – படை வீரா

வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ்
வித்தக சித்த வயலியில் – குமரேசா

கிட்டிய பல் கொ(ண்)டு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு
கித்தி நடக்கும் அலகை – சுற்றிய வேலா

கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி
கெர்ப்ப புரத்தில் அறு முகப் – பெருமாளே.

English

muttama rutti yirukuzhai thottaka daikka Niyalena
motpaivi Laiththu muRaiyaLith – thidumAthar

muththami rathna marakatham vaiththavi chithra mukapada
mocchiya pacchai yakilmaNath – thanapAram

kattiya Naiththu nakanuthi pattaka zhuththi liRukiya
kaiththala meyththu vasanamat – RuyirsOrung

kattamu yakki nanupavam vittavi daRku niyamitha
kaRpanai paksha mudanaLith – tharuLAthO

vettiya katka munaikodu vattaku Naththu raNamuka
vikrama vukra vekuvithap – padaiveerA

vetRiyai yutRa kuRavarkaL petRako dikku mikamakizh
viththaka chiththa vayaliyiR – kumarEsA

kittiya paRko dasurarkaL mattaRa vutka vadalodu
kiththina dakku malakaisut – RiyavElA

kettava rutRa thuNaiyena nattaruL sitta pasupathi
kerppapu raththi laRumukap – perumALE.

English Easy Version

mutta marutti iru kuzhai thotta kadaik kaN iyal ena
motpai viLaiththu muRai aLiththidu – mAthar

muththam irathna marakatham vaiththa vichithra mukapada(m)
mocchiya pacchai akil maNath – thana pAram

katti aNaiththu nakanuthi patta kazhuththil iRukiya
kaith thalam eyththu vasanam atRu – uyir sOrum

katta(m) muyakkin anupavam vitta vidaRku niyamitha
kaRpanai pakshamudan aLiththu – aruLAthO

vettiya katkam munai ko(N)du atta kuNaththu raNamuka
vikrama ukra veku vithap – padai veerA

vetRiyai utRa kuRavarkaL petRa kodikku mika makizh
viththaka chiththa vayaliyil – kumarEsA

kittiya pal ko(N)du asurarkaL mattu aRa utka adalOdu
kiththi nadakkum alakai sutRiya – vElA

kettavar utRa thuNai ena nattu aruL sitta pasupathi
kerppa puraththil aRu mukap – perumALE.