திருப்புகழ் 928 சஞ்சல சரித (கருவூர்)

Thiruppugal 928 Sanjalasaridha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன – தனதான

சஞ்சல சரித பரநாட்டர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழுஆக்கினை – முடிசூடித்

தண்டிகை களிறு பரிமேற்றனி
வெண்குடை நிழலி லுலவாக்கன
சம்ப்ரம விபவ சவுபாக்கிய – முடையோராய்க்

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய – மியல்கீதங்

கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றென மனது மகிழ்பார்த்திபர்
கொண்டய னெழுதும் யமகோட்டியை – யுணராரே

பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
வென்றிட சகுனி கவறாற்பொருள்
பங்குடை யவனி பதிதோற்றிட – அயலேபோய்ப்

பண்டையில் விதியை நினையாப்பனி
ரண்டுடை வருஷ முறையாப்பல
பண்புடன் மறைவின் முறையாற்றிரு – வருளாலே

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
முந்துத முடைய மனைவாழ்க்கையின்
வந்தபி னுரிமை யதுகேட்டிட – இசையாநாள்

மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
யுந்தினன் மருக வயலூர்க்குக
வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன
தந்தன தனன தனதாத்தன – தனதான

சஞ்சல சரித பர நாட்டர்கள்
மந்திரி குமரர் படை ஆட்சிகள்
சங்கட மகிபர் தொழு ஆக்கினை – முடிசூடி

தண்டிகை களிறு பரி மேல் தனி
வெண் குடை நிழலில் உலவா கன
சம்ப்ரம விபவ சவுபாக்கியம் – உடையோராய்

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையில் இசையா திரள்
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் – இயல் கீதம்

கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய(ம்)
நன்று என மனது மகிழ் பார்த்திபர்
கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை – உணராரே

பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர்
வென்றிட சகுனி கவறால் பொருள்
பங்கு உடை அவனி பதி தோற்றிட – அயலே போய்ப்

பண்டையில் விதியை நினையாப்
பனிரண்டுடை வருஷ முறையாப் பல
பண்புடன் மறைவின் முறையால் – திருவருளாலே

வஞ்சனை நழுவி நிரை மீட்சியில்
முந்து த(ம்) முடைய மனை வாழ்க்கையில்
வந்த பின் உரிமை அது கேட்டிட – இசையா நாள்

மண் கொள விசையன் விடு தேர்ப் பரி
உந்தினன் மருக வயலூரக் குக
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் – பெருமாளே.

English

sanjala saritha paranAttarkaL
manthiri kumarar padaiyAtchikaL
sangada makipar thozhuAkkinai – mudicUdith

thaNdikai kaLiRu parimEtRani
veNkudai nizhali lulavAkkana
samprama vipava savupAkkiya – mudaiyOrAyk

kunjamum visiRa iRumAppodu
panjaNai misaiyi lisaiyAththiraL
kompukaL kuzhalkaL vekuvAththiya – miyalkeetham

kongaNi makaLir perunAttiya
nanRena manathu makizhpArththipar
koNdaya nezhuthum yamakOttiyai – yuNarArE

panjavar kodiya vinainUtRuvar
venRida sakuni kavaRARporuL
pangudai yavani pathithOtRida – ayalEpOyp

paNdaiyil vithiyai ninaiyAppani
raNdudai varusha muRaiyAppala
paNpudan maRaivin muRaiyAtRiru – varuLAlE

vanjanai nazhuvi niraimeetchiyil
munthutha mudaiya manaivAzhkkaiyin
vanthapi nurimai yathukEttida – isaiyAnAL

maNkoLa visaiyan viduthErppari
yunthinan maruka vayalUrkkuka
vanjiyi lamarar siRaimeettaruL – perumALE.

English Easy Version

sanjala saritha para nAttarkaL
manthiri kumarar padai AtchikaL
sangada makipar thozhu Akkinai – mudicUdi

thaNdikai kaLiRu pari mEl thani
veN kudai nizhalil ulavA kana
samprama vipava savupAkkiyam – udaiyOrAy

kunjamum visiRa iRumAppodu
panjaNai misaiyil isaiyA thiraL
kompukaL kuzhalkaL veku vAththiyam – iyal keetham

kongu aNi makaLir peru nAttiya(m)
nanRu ena manathu makizh pArththipar
koNdu ayan ezhuthum yama kOttiyai – uNarArE

panjavar kodiya vinai nUtRuvar
venRida sakuni kavaRAl poruL
pangu udai avani pathi thOtRida – ayalE pOyp

paNdaiyil vithiyai ninaiyAp pani
raNdudai varusha muRaiyAp pala
paNpudan maRaivin muRaiyAl thiru – varuLAlE

vanjanai nazhuvi nirai meerchiyil
munthu tha(m)mudaiya manai vAzhkkaiyil
vantha pin urimai athu kEttida – isaiyA nAL

maN koLa visaiyan vidu thErp pari
unthinan maruka vayalUrak kuka
vanjiyil amarar siRai meettu aruL – perumALE.