திருப்புகழ் 930 குருவும் அடியவர் (நெருவூர்)

Thiruppugal 930 Guruvumadiyavar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

குருவு மடியவ ரடியவ ரடிமையு
மருண மணியணி கணபண விதகர
குடில செடிலினு நிகரென வழிபடு – குணசீலர்

குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி – விலைமாதர்

மருவு முலையெனு மலையினி லிடறியும்
அளக மெனவள ரடவியில் மறுகியு
மகர மெறியிரு கடலினில் முழுகியு – முழலாமே

வயலி நகரியி லருள்பெற மயில்மிசை
யுதவு பரிமள மதுகர வெகுவித
வனச மலரடி கனவிலு நனவிலு – மறவேனே

உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு
மருது நெறிபட முறைபட வரைதனில்
உரலி னொடுதவழ் விரகுள இளமையு – மிகமாரி

உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
கவிகை யிடவல மதுகையு நிலைகெட
வுலவில் நிலவறை யுருவிய வருமையு – மொருநூறு

நிருப ரணமுக வரசர்கள் வலிதப
விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு
நிகில செகதல முரைசெயு மரிதிரு – மருகோனே

நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய
குடக தமனியு நளினமு மருவிய
நெருவை நகருறை திருவுரு வழகிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

குருவும் அடியவர் அடியவர் அடிமையும்
அருண மணி அணி கண பண விதகர
குடில செடிலினு(ம்) நிகர் என வழிபடு – குணசீலர்

குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
அழுகுதலும் இலி நலம் இலி பொறை இலி
குசல கலை இலி தலை இலி நிலை இலி – விலைமாதர்

மருவு முலை எனும் மலையினில் இடறியும்
அளகம் என வளர் அடவியில் மறுகியும்
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் – உழலாமே

வயலி நகரியில் அருள் பெற மயில் மிசை
உதவு பரிமள மது கர வெகு வித
வனச மலர் அடி கனவிலும் நனவிலும் – மறவேனே

உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு
மருது நெறி பட முறைபட வரைதனில்
உரலினொடு தவழ் விரகு உள இளமையும் – மிக மாரி

உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி
கவிகை இட வல மதுகையும் நிலை கெட
உலவு இல் நிலவறை உருவிய அருமையும் – ஒரு நூறு

நிருப ரண முக அரசர்கள் வலி தப
விசயன் ரத முதல் நடவிய எளிமையும்
நிகில செகதலம் உரை செயும் அரி திரு – மருகோனே

நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய
குடக தமனியு(ம்) நளினமும் மருவிய
நெருவை நகர் உறை திரு உரு அழகிய – பெருமாளே.

English

guruvu madiyava radiyava radimaiyu
maruNa maNiyaNi kaNapaNa vithakara
kudila sedilinu nikarena vazhipadu – kuNaseelar

kuzhuvi lozhukuthal thozhukuthal vizhukuthal
azhuku thalumili nalamili poRaiyili
kusala kalaiyili thalaiyili nilaiyili – vilaimAthar

maruvu mulaiyenu malaiyini lidaRiyum
aLaka menavaLa radaviyil maRukiyu
makara meRiyiru kadalinil muzhukiyu – muzhalAmE

vayali nakariyi laruLpeRa mayilmisai
yuthavu parimaLa mathukara vekuvitha
vanasa malaradi kanavilu nanavilu – maRavEnE

uruvu perukayal kariyathor mukilenu
maruthu neRipada muRaipada varaithanil
urali noduthavazh virakuLa iLamaiyu – mikamAri

umizha niraikaLi nidarkeda vadarkiri
kavikai yidavala mathukaiyu nilaikeda
vulavil nilavaRai yuruviya varumaiyu – morunURu

nirupa raNamuka varasarkaL valithapa
visayan rathamuthal nadaviya veLimaiyu
nikila sekathala muraiseyu marithiru – marukOnE

nilavu sorivaLai vayalkaLu nedukiya
kudaka thamaniyu naLinamu maruviya
neruvai nakaruRai thiruvuru vazhakiya – perumALE.

English Easy Version

guruvum adiyavar adiyavar adimaiyum
aruNa maNi aNi kaNa paNa vithakara
kudila sedilinu(m) nikar ena vazhipadu – kuNaseelar

kuzhuvil ozhukuthal thozhukuthal vizhukuthal
azhukuthalum ili nalam ili poRai ili
kusala kalai ili thalai ili nilai ili – vilai mAthar

maruvu mulai enum malaiyinil idaRiyum
aLakam ena vaLar adaviyil maRukiyum
makaram eRi iru kadalinil muzhukiyum – uzhalAmE

vayali nakariyil aruL peRa mayil misai
Uthavu parimaLa mathu kara veku vitha
vanasa malar adi kanavilum nanavilum – maRavEnE

uruvu peruku ayal kariyathu or mukil enu
maruthu neRi pada muRaipada varaithanil
uralinodu thavazh viraku uLa iLamaiyum – mika mAri

umizha niraikaLin idar keda adar kiri
kavikai ida vala mathukaiyum nilai keda
ulavu il nilavaRai uruviya arumaiyum – oru nURu

nirupa raNa muka arasarkaL vali thapa
visayan ratha muthal nadaviya eLimaiyum
nikila sekathalam urai seyum ari thiru – marukOnE

nilavu sori vaLai vayalkaLum nedukiya
kudaka thamaniyu(m) naLinamum maruviya
neruvai nakar uRai thiru uru azhakiya – perumALE.