திருப்புகழ் 934 பரிவுறு நாரற்று (சேலம்)

Thiruppugal 934 Parivurunaratru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் – தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற் – றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் – தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் – தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் – றணைவாயே

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகும ராமுத் – தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் – தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித் – திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் – தனதான

பரிவுறு நார் அற்று அழல்மதி வீச
சிலைபொரு காலுற்று – அதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவ
குழல்தனி யோசைத் – தரலாலே

மருவியல் மாதுக்கு இருகயல் சோர
தனிமிக வாடித் – தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்து
அருள்முருகா உற்று – அணைவாயே

கிரிதனில் வேல்விட்டு இருதொளை யாகத்
தொடுகுமரா முத் – தமிழோனே

கிளரொளி நாதர்க்கு ஒருமகனாகி
திருவளர் சேலத்து – அமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாள
தனிமயி லேறித் – திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்கு
இளைய விநோதப் – பெருமாளே.

English

parivuRu nAraR Razhalmathi veesac
cilaiporu kAluR – RathanAlE

panipadu sOlaik kuyilathu kUvak
kuzhalthani yOsaith – tharalAlE

maruviyal mAthuk kirukayal sOrath
thanimika vAdith – thaLarAthE

manamuRa vAzhath thirumaNi mArpath
tharuLmuru kAvuR – RaNaivAyE

kirithanil vElvit tiruthoLai yAkath
thodukuma rAmuth – thamizhOnE

kiLaroLi nAthark korumaka nAkith
thiruvaLar sElath – thamarvOnE

porukiri chUrak kiLaiyathu mALath
thanimayi lERith – thirivOnE

pukarmuka vEzhak kaNapathi yAruk
kiLaiyavi nOthap – perumALE.

English Easy Version

parivuRu nAraR Razhalmathi veesa
cilaiporu kAluR – RathanAlE

panipadu sOlaik kuyilathu kUva
kuzhalthani yOsaith – tharalAlE

maruviyal mAthuk kirukayal sOrath
thanimika vAdith – thaLarAthE

manamuRa vAzha thirumaNi mArpa
ththu aruLmurukA vuRRu – aNaivAyE

kirithanil vElvit tiruthoLai yAkath
thodukumarA muth – thamizhOnE

kiLaroLi nAthark korumaka nAki
thiruvaLar sElath – thamarvOnE

porukiri chUrak kiLaiyathu mALath
thanimayi lERith – thirivOnE

pukarmuka vEzhak kaNapathi yArukku
iLaiya vinOthap – perumALE