திருப்புகழ் 935 சங்குவார் முடி (ராஜபுரம்)

Thiruppugal 935 Sangkuvarmudi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன
தந்த தானன தத்தன – தனதான

சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகரி பெற்றவன் – வெகுகோடிச்

சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள – கவிராஜப்

பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
பந்த போதமு ரைத்திடு – புலவோன்யான்

பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
பஞ்ச பாதக ரைப்புகழ் – செயலாமோ

வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ
ருண்டு மூலமெ னக்கரு – டனிலேறி

விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
தம்ப ராவஅ டுப்பவன் – மருகோனே

கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
கொங்கின் வீரக ணப்ரிய – குமராபொற்

கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
கொங்கு ராஜபு ரத்துறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன
தந்த தானன தத்தன – தனதான

சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மா கரி பெற்றவன் – வெகு கோடிச்

சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதி சதுர்க் கவி
சண்ட மாருதம் மற்றுள – கவி ராஜப்

பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த
ப்ரபந்த போதம் உரைத்திடு – புலவோன் யான்

பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் எனச் சில
பஞ்ச பாதகரைப் புகழ் – செயலாமோ

வெம் கை யானை வனத்து இடை துங்க மா முதலைக்கு
வெருண்டு மூலமெனக் – கருடனில் ஏறி

விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு
இதம் பராவ அடுப்பவன் – மருகோனே

கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு
கொங்கின் வீர கண – ப்ரிய குமரா பொன்

கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி
செறி கொங்கு ராஜபுரத்து உறை – பெருமாளே.

English

sangu vArmudi poRkazhal pongu sAmarai kaththikai
thaNdu mAkari petRavan – vekukOdi

santha pAshaikaL katRavan manthra vAthisa thurkkavi
saNda mArutha matRuLa – kavirAjap

pangi pAlasa rasvathi sanga nUlkaLvi thiththapra
pantha pOthamu raiththidu – pulavOnyAn

paNdai mUvezhu varkkethir kaNda neeyume nacchila
panja pAthaka raippukazh – seyalAmO

vengai yAnai vanaththidai thunga mAmutha laikkuve
ruNdu mUlame nakkaru – danilERi

viNpa rAvA dukkiya maNpa rAvA thaRkuvi
thampa rAvA duppavan – marukOnE

konga NAthitha rappeRu kongi nUdusu kiththidu
kongin veeraka Napriya – kumarApoR

kongu lAvuku Rakkodi kongai yEthazhu viccheRi
kongu rAjapu raththuRai – perumALE.

English Easy Version

changuvAr mudi pon kazhal pongu sAmarai kaththikai
thaNdu mA kari petRavan – veku kOdis

santha pAshaikaL katRavan manthra vAthi sathurk kavi
saNda mArutham matRuLa – kavi rAjap

pangi pAla sarasvathi sanga nUlkaL vithiththa
prapantha pOtham uraiththidu – pulavOn yAn

paNdai mU ezhuvarkku ethir kaNda neeyum enac chila
panja pAthakaraip pukazh – seyalAmO

vem kai yAnai vanaththu idai thunga mA muthalaikku
veruNdu mUlamenak karudanil – ERi

viN parAva adukkiya maN parAva athaRku
itham parAva aduppavan – marukOnE

kongaNAthi tharappeRu konginUdu sukiththidu
kongin veera kaNa – priya kumarA

pon kongu ulAvu kuRak kodi kongaiyE thazhuvi seRi
kongu rAjapuraththu uRai – perumALE