திருப்புகழ் 937 சஞ்சரி உகந்து (சிங்கை-காங்கேயம்)

Thiruppugal 937 Sanjariugandhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்ததன தந்த தந்ததன தந்த
தந்ததன தந்த – தனதான

சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
தண்குவளை யுந்து – குழலாலுந்

தண்டரள தங்க மங்கமணி கின்ற
சண்டவித கும்ப – கிரியாலும்

நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை – யுடனாசை

நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி – வரவேணும்

கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற – கழலோனே

கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற – கதிர்வேலா

செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த – திருமார்பா

செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்ததன தந்த தந்ததன தந்த
தந்ததன தந்த – தனதான

சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற
தண் குவளை உந்து – குழலாலும்

தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற
சண்ட வித கும்ப – கிரியாலும்

நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து
நம்பி விட நங்கையுடன் – ஆசை

நண்பு உறு எனை இன்று நன்று இல் வினை கொன்று
நன்று மயில் துன்றி – வரவேணும்

கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி
கந்தி கமழ்கின்ற – கழலோனே

கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள்
கண்டு பொருகின்ற – கதிர் வேலா

செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை
திண் குயம் அணைந்த – திரு மார்பா

செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த
சிங்கையில் அமர்ந்த – பெருமாளே

English

sanjariyu kanthu ninRumural kinRa
thaNkuvaLai yunthu – kuzhalAlum

thaNdaraLa thanga mangamaNi kinRa
saNdavitha kumpa – giriyAlum

nanjavinai yonRi thanjamena vanthu
nampivida nangai – yudanAsai

naNpuRenai yinRu nanRilvinai konRu
nanRumayil thunRi – varavENum

kanjamalar konRai thumpaimakizh vinji
kanthikamazh kinRa -kazhalOnE

kanRidupi NangaL thinRiduka NangaL
kaNduporu kinRa – kathirvElA

senjolpunai kinRa engaLkuRa mangai
thiNkuyama Naintha – thirumArpA

seNpakami langu minpozhilsi Rantha
singaiyila marntha – perumALE.

English Easy Version

sanjari ukanthu ninRu muralkinRa
thaN kuvaLai unthu – kuzhalAlum

thaN tharaLa thangam angam aNikinRa
saNda vitha kumpa – giriyAlum

nanja vinai onRi thanjam ena vanthu
nampi vida nangaiy – udan Asai

naNpu uRu enai inRu nanRu il vinai konRu
nanRu mayil thunRi – varavENum

kanja malar konRai thumpai makizh vinji
kanthi kamazhkinRa – kazhalOnE

kanRidu piNangaL thinRidu kaNangaL
kaNdu porukinRa – kathir vElA

sem sol punaikinRa engaL kuRa mangai
thiN kuyam aNaintha – thiru mArpA

seNpakam ilangu min pozhil siRantha
singaiyil amarntha – perumALE