திருப்புகழ் 939 இரு குழை இடறி (பட்டாலியூர்)

Thiruppugal 939 Irukuzhaiidari

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனனத் தான தானன
தனதன தனனத் தான தானன
தனதன தனனத் தான தானன – தனதான

இருகுழை யிடறிக் காது மோதுவ
பரிமள நளினத் தோடு சீறுவ
இணையறு வினையைத் தாவி மீளுவ – வதிசூர

எமபடர் படைகெட் டோட நாடுவ
அமுதுடன் விடமொத் தாளை யீருவ
ரதிபதி கலைதப் பாது சூழுவ – முநிவோரும்

உருகிட விரகிற் பார்வை மேவுவ
பொருளது திருடற் காசை கூறுவ
யுகமுடி விதெனப் பூச லாடுவ – வடிவேல்போல்

உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
உனதடி நிழலிற் சேர வாழ்வது – மொருநாளே

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
மரகத கிரணப் பீலி மாமயில்
முதுரவி கிரணச் சோதி போல்வய – லியில்வாழ்வே

முரண்முடி யிரணச் சூலி மாலினி
சரணெனு மவர்பற் றான சாதகி
முடுகிய கடினத் தாளி வாகினி – மதுபானம்

பருகினர் பரமப் போக மோகினி
அரகர வெனும்வித் தாரி யாமளி
பரிபுர சரணக் காளி கூளிகள் – நடமாடும்

பறையறை சுடலைக் கோயில் நாயகி
இறையொடு மிடமிட் டாடு காரணி
பயிரவி யருள்பட் டாலி யூர்வரு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனனத் தான தானன
தனதன தனனத் தான தானன
தனதன தனனத் தான தானன – தனதான

இரு குழை இடறிக் காது மோதுவ
பரிமள நளினத்தோடு சீறுவ
இணை அறு வினையைத் தாவி மீளுவ – அதி சூர

எம படர் படை கெட்டு ஓட நாடுவ
அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ
ரதி பதி கலை தப்பாது சூழுவ – முநிவோரும்

உருகிட விரகில் பார்வை மேவுவ
பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ
யுக முடிவு இது எனப் பூசல் ஆடுவ – வடி வேல் போல்

உயிர் வதை நயனக் காதல் மாதர்கள்
மயல் தரு கமரில் போய் விழா வகை
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் – ஒரு நாளே

முருகு அவிழ் தொடையைச் சூடி நாடிய
மரகத கிரணப் பீலி மாமயில்
முது ரவி கிரணச் சோதி போல் – வயலியில் வாழ்வே

முரண் முடி இரணச் சூலி மாலினி
சரண் எனும் அவர் பற்றான சாதகி
முடுகிய கடினத்து ஆளி வாகினி – மது பானம்

பருகினர் பரம போக மோகினி
அரகர எனும் வித்தாரி யாமளி
பரி புர சரண காளி கூளிகள் – நடமாடும்

பறை அறை சுடலை கோயில் நாயகி
இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி
பயிரவி அருள் பட்டாலியூர் வரு – பெருமாளே

English

irukuzhai yidaRik kAthu mOthuva
parimaLa naLinath thOdu seeRuva
iNaiyaRu vinaiyaith thAvi meeLuva – vathicUra

emapadar padaiket tOda nAduva
amuthudan vidamoth thALai yeeruva
rathipathi kalaithap pAthu sUzhuva – munivOrum

urukida virakiR pArvai mEvuva
poruLathu thirudaR kAsai kURuva
yukamudi vithenap pUsa lAduva – vadivElpOl

uyirvathai nayanak kAthal mAtharkaL
mayaltharu kamariR pOyvi zhAvakai
unathadi nizhaliR sEra vAzhvathu – morunALE

murukavizh thodaiyaic cUdi nAdiya
marakatha kiraNap peeli mAmayil
muthuravi kiraNac cOthi pOlvaya – liyilvAzhvE

muraNmudi yiraNac cUli mAlini
saraNenu mavarpat RAna sAthaki
mudukiya kadinath thALi vAkini – mathupAnam

parukinar paramap pOka mOkini
arakara venumvith thAri yAmaLi
paripura saraNak kALi kULikaL – nadamAdum

paRaiyaRai sudalaik kOyil nAyaki
iRaiyodu midamit tAdu kAraNi
payiravi yaruLpat tAli yUrvaru – perumALE.

English Easy Version

iru kuzhai idaRik kAthu mOthuva
parimaLa naLinaththOdu seeRuva
iNai aRu vinaiyaith thAvi meeLuva – athi cUra

ema padar padai kettu Oda nAduva
amuthudan vidam oththu ALai eeruva
rathi pathi kalai thappAthu sUzhuva – munivOrum

urukida virakil pArvai mEvuva
poruL athu thirudaRku Asai kURuva
yuka mudivu ithu enap pUsal Aduva – vadi vEl

pOl uyir vathai nayanak kAthal mAtharkaL
mayal tharu kamaril pOy vizhA vakai
unathu adi nizhalil sEra vAzhvathum – oru nALE

muruku avizh thodaiyaic cUdi nAdiya
marakatha kiraNap peeli mAmayil
muthu ravi kiraNac cOthi pOl vayaliyil – vAzhvE

muraN mudi iraNac cUli mAlini
saraN enum avar patRAna sAthaki
mudukiya kadinaththu ALi vAkini – mathu pAnam

parukinar parama pOka mOkini
arakara enum viththAri yAmaLi
pari pura saraNa kALi kULikaL – nadamAdum

paRai aRai sudalai kOyil nAyaki
iRaiyodum idam ittu Adu kAraNi
பயிரவி யருள்பட் டாலி யூர்வரு – பெருமாளே.