திருப்புகழ் 940 கத்தூரி யகரு (பட்டாலியூர்)

Thiruppugal 940 Kaththuriyagaru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
தத்தான தனன தனதன – தனதான

கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
கற்பூர களப மணிவன – மணிசேரக்

கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
கச்சோடு பொருது நிமிர்வன – தனமாதர்

கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
கொற்சேரி யுலையில் மெழுகென – வுருகாமே

கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
குற்றேவல் அடிமை செயும்வகை – யருளாதோ


அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
லச்சான வயலி நகரியி – லுறைவேலா

அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
டக்காகி விரக பரிபவ – மறவேபார்


பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
பற்றாய பரம பவுருஷ – குருநாதா

பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவு மமரர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
தத்தான தனன தனதன – தனதான

கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல
கற்பூர களபம் அணிவன – மணி சேர

கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன
கச்சோடு பொருது நிமிர்வன – தன மாதர்

கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு
கொல் சேரி உலையில் மெழுகு என – உருகாமே

கொக்கு ஆ(ம்) நரைகள் வரு முனம் இக்காய இளமை உடன்
முயல்
குற்றேவல் அடிமை செயும் வகை – அருளாதோ

அத் தூர புவன தரிசன(ம்) நித்தார கனக நெடு மதில்
அச்சான வயலி நகரியில் – உறை வேலா

அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு
அக்காகி விரக பரிபவம் – அறவே பார்

பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த் தூதர் விரவ அருள்
தரு பற்று ஆய பரம பவுருஷ – குருநாதா

பச்சோலை குலவு பனை வளர் மைச் சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவும் அமரர்கள் – பெருமாளே.

English

kaththUri yakaru mrukamatha viththAra padira imasala
kaRpUra kaLapa maNivana – maNisErak

kattAra vadamu madarvana nittUra kalaka miduvana
kacchOdu poruthu nimirvana – thanamAthar

koththUru naRava menavatha raththURal paruki yavarodu
koRchEri yulaiyil mezhukena – vurukAmE

kokkAka naraikaL varumuna mikkAya viLamai yudanmuyal
kutREval adimai seyumvakai – yaruLAthO

aththUra puvana tharisana niththAra kanaka nedumathi
lacchAna vayali nakariyi – luRaivElA

acchOve navasa vuvakaiyi lutchOrtha ludaiya paravaiyo
dakkAki viraka paripava – maRavEpAr

paththUrar parava viraivusel meyththUthar virava varudaru
patRAya parama pavurusha – gurunAthA

pacchOlai kulavu panaivaLar maicchOlai mayilkaL nadamidu
pattAli maruvu mamararkaL – perumALE.

English Easy Version

kaththUri akaru mrukamatha viththAra padira imasala
kaRpUra kaLapam aNivana – maNi sEra

kattu Ara vadamum adarvana nittUra kalakam iduvana
kacchOdu poruthu nimirvana – thana mAthar

koththu Uru naRavam ena atharaththu URal paruki avarodu
kol chEri ulaiyil mezhuku ena – urukAmE

kokku A(m) naraikaL varu munam ikkAya iLamai udan muyal
kutREval adimai seyum vakai – aruLAthO

ath thUra puvana tharisana(m) niththAra kanaka nedu mathil
acchAna vayali nakariyil – uRai vElA

acchO ena vasa uvakaiyil uL sOrthal udaiya paravaiyodu
akkAki viraka paripavam – aRavE pAr

paththu Urar parava viraivu sel meyth thUthar virava aruL
tharu patRu Aya parama pavurusha – gurunAthA

pacchOlai kulavu panai vaLar maic chOlai mayilkaL nadamidu
pattAli maruvum amararkaL – perumALE.